பக்கம்:சிந்தாநதி-நினைவலைகள்.pdf/245

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

244 & சிந்தாநதி நேரம் தென்பாகப் பேசக் கூடியவர்கள், அந்த நேரத்துக்கு என்னை வேறு தடத்துக்குத் துரக்கியவர்கள்- அந்த மெரீனா கடற்கரையில் மாலை வேளையில் கூடிய குழு. நான் மறக்கவில்லை. என் நினைவின் பின்னணியில் மறைவாக இயங்கிக் கொண்டுதானிருந்தனர். அவர்கள் எழுத்தாளர்கள் என்றால் அல்ல. ஏதா வகையில் அவர்கள் சீலர்கள்: தீரர்கள். நானும் ஏன் மணிக்கொடி கோஷ்டிபோல் ஒரு குழு சேர்க்கக்கூடாது? என்னுடைய முக்கிய நோக்கம் இலக் கியத்துக்குத் தொண்டு அல்ல. அன்றுபோல், புத்திசாலித் தனமான, அறிவுப்பூர்வமான சம்பாஷணை சற்று நேரத்துக்கேனும் கிடைக்காதா? ஆயிரம் புத்தகங்களைத் தனியாகப் படித்து, அறிவை விருத்தி செய்து கொள்வது என்ன, சற்று நேரம் நேரிடையாகக் கருத்துப் பரிமாறிக் கொள்வதற்கு ஈடாகுமா? ஆனால், இது நெற்றியில் பட்டம் ஒட்டிக்கொண்டோ, பிள்ளையார் பூசை போட்டோ நடக்கிற காரியம் அல்லவே? கூட்டுவதைக் காட்டிலும், இது தானாகச் சேர வேண்டிய கூட்டம் அல்லவா? சிறுகச் சிறுக, இரண்டு மூன்று மாத காலத்தில் கபாலி கோவில் குளத்துப் படிக்கட்டில், கோபுரத்தைப் பார்த்த திக்கில். ஒரு பத்துப்பேர். இவர்கள் எல்லோரும் எழுத்தாளர்கள் அல்லர், வாசகர்களுமல்லர். பேச்சு ருசிக்கு வந்தவர்களும் சேர்ந்து இருந்தார்கள். இந்தக் கூட்டம், மணிக்கொடி கோஷ்டிக்கு உறை போடக் காணாது என்பதை முன்னாலேயே நான் உணர்ந்திருந்தாலும், நாளடைவில், என் இஷ்டத்துக்கு இதைப் பட்டை திட்டிவிடலாம் என்று நினைத்தேன். ஆனால் நாளாக ஆக என் ஆசையின் வீண்தான் வெளிப் ، تيبسا-ساس