பக்கம்:சிந்தாநதி-நினைவலைகள்.pdf/268

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

லா. ச. ராமாமிருதம் : 267 பல்லை விளக்கிவிட்டு பின்னால் கைகட்டிய வண்ணம், சமையலறையுள் நுழைந்தேன். இங்கே ஒரு fridge, ஒரு grinder கூடியிருக்கின்றன. ப்ரேமா காப்பி கலந்துகொண்டிருக்கிறாள். “என் அளவு தெரியுமோன்னோ? அளவு மட்டு, சர்க்கரை மட்டு, தெரியுமோன்னோ?” ப்ரேமா புன்னகை புரிகிறாள். ஆனால், அவன் கலவையில் எனக்கு இரண்டுமே சற்றுக் கூடத்தான். என் வாசற்படி தாண்டினாலே இது தான் எனக்கு எங்கேயுமே Trouble. நிறையைக் கொடுத் தால் பிரியம் என்று நினைத்துக்கொண்டிருக்கிறார்கள். "இந்த வயதில் அட்ஜஸ்ட் பண்ணிண்டு போறதை விட்டுட்டு, எல்லாத்திலும் குங்குமப்பூத் தராசு எடை பிடிவாதம் பிடிச்சால் எத்தனை நாள் நடக்கும்?” எல்லாமே நடந்த வரைக்கும்தான். வாழ்க்கையே அநித்யமாயிருக்கையில். ஆனால், இப்பத்தான் எதிர்பார்ப்பு கூட குங்குமப் பூத் தராசு எடை நுணுக்கத்தில் கூட. சின்னச் சின்ன எடை. ஆனால், என்ன என்ன வித்யாசம் ! ★ 女 , k எடைகளை அனுபவிக்கத்தானே, என் நினைப்பில் இந்த யாத்திரை! காசிக்குப் போகும் நோக்கத்தில், வீட்டுப் படி விட்டு இறங்கி நடக்கும் மூன்று அடிகளிலேயே, காசிக்குப் போன பலன் கிட்டிவிடுவதாக ஒரு வசனம்.