பக்கம்:சிந்தாநதி-நினைவலைகள்.pdf/277

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

276 : சிந்தாநதி நாய்க் குட்டியை முழங்கை வளைவில் அனைத்துக் கொண்டு போய்விட்டார். திரும்பிச் சில சாமான் களோடு வந்தார். நாய்க்குக் கழுத்துப் பட்டை, ஒரு தோல் வார், ஒரு லாஸ்ர், ஒரு குட்டிப் பாய்த் தடுக்கு. இத்யாதி. கூடத்தில் ஒரு மூலையில் நாய்க் குட்டியை ஏளப் பண்ணியாகி விட்டது. Fido இப்போ வீட்டுக்கு இளவரசு, Fidoவின் அழகு பற்றிச் சந்தேகமேயில்லை. உடல் பூரா வெள்ளைச் சடைகளினூடே, பொத்தான் கருவிழிகள், புத்திசாலித் தனத்துடன் பளபளவெனப் ப்ரகாசித்தன. சற்று நேரம் அதனால் அசைவற்று இருக்க முடிந்தால் பொம்மையோடு பொம்மையாக நவராத்ரிக் கொலுவில் வைத்தால் எப்படி இருக்கும்! அதனால் அப்படி ஒரு கணம் கூட இருக்க முடியாதே! துருதுருவென்று அலை வதும், எகிறிக் குதிப்பதும், குரைப்பதும்- Smart fellowபூக் குழந்தை. கூடத்தில் எங்களுக்குக் கலம் போட்டவுடன், சம அந்தஸ்தில் அதற்கு லாஸ்ரில் பால் ஊற்றியாகும். அண்ணனுக்குப் புளிச்ச பழையது தகரார். ஆனால், தம்பிக்குப் பால் சோறு, அது சோறு சாப்பிட முடியுமா? பூக் குழந்தை. "நீங்கள் உயிரைக் கொடுத்து உழைக்கிறேள். நாங்கள் சாப்பிடுகிறோம். இந்த நாய்க்குட்டி நமக்குக் கட்டுப் படியாகிற சமாச்சாரமா?" சித்தி கெஞ்சிப் பார்த்தாள், மிஞ்சிப் பார்த்தாள். எங்களைப் பொருட்படுத்தாமல், எங்கள் எதிரில், கொஞ்சியும் பார்த்தாள் ஊ. ஹாம். “உங்களுக்கு உழைத்துப் போடுகிற மாதிரி, அதற்கும் உழைத்துவிட்டுப் போகிறேன். எப்படியும் உங்களைப் போல் அது நன்றி கெட்டதில்லை."