பக்கம்:சிந்தாநதி-நினைவலைகள்.pdf/280

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

லா, ச. ராமாமிருதம் : 279 “கொடுத்தால்தானே சித்தப்பா?” "அதென்னடா அப்படி ஒசிக் கதை, அச்சில் பேரைக் கண்டால் போதும்னு அலையறையாக்கும் ! எப்படி யானும் போ. யூ ஆர் வேஸ்டிங் யுவர் டைம். கதை யெழுதினால் சன்மானம் வர வேண்டும். வந்தால் தினம் ஒரு கதையேனும் எழுத வேண்டாமா? படிப் படியா ஏறி விற்பனை பண்ணப் பார்க்க வேண்டும். அலுக்காமல் ஒரு தடவைக் கிரண்டு தடவை போய் என்னாச்சுன்னு கேக்கணும். என்னத்தைப் பண்ணப் போறையோ? ஒரு Interest ஐயேனும் ஒழுங்கா கடைசிவரை பற்ற வேண்டும். கதை யெழுதி நம் நாட்டில் பிழைச்சவன் யார்-ஏ, Fldo, come here!” எதிர்ச் சாரியில் என்னத்தையோ முகர்ந்துகொண் டிருந்தது, அதட்டலைக் கேட்டதும், குறுக்கே பாய்ந்து ஒடி வருவதற்கும், வாலாஜா ரோடு, Bells ரோடாக மாறும் திருப்பத்திலிருந்து பூம்! பூம்! எச்சரிக்க நேரமில்லை. எங்களுக்கு வாய் அடைத்து விட்டது. Fida வந்த வழியே திரும்ப முயன்றது அவ்வளவுதான். நான் கண்ணை மூடிக்கொண்டு விட்டேன். முழங் கால்களுக்கு கீழே கிடுகி.டு. ஒரே உதறல். கார் நிற்கக்கூட வில்லை. சிட்டாய்ப் பறந்தது. சிற்றப்பா அதைத் துரத்த முயன்று திரும்பி வந்தார். மலர்ச்சியில் சிலிர்த்துக்கொண்ட ஒரு பெரிய மல்லிப் பூப்பந்தைச் சுற்றி, மூவரும் மெளனமாக நின்றோம். இப்பத்தான் இரண்டு நொடிக்கு முன் என்ன உத்வேகம், உற்சாகம், உயிரின் ததும்பல்! இப்போ என்ன செய்வது? சடலத்தை வீட்டுக்கு எடுத்துச் சென்று காப்பதா? முடிகிற காரியமா?