பக்கம்:சிந்தாநதி-நினைவலைகள்.pdf/282

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

46 தருணம் சொல்லுக்கும் எனக்கும் ஐம்பது வருட சகவாசத் தில், எங்கள் உறவின் தன்மை இன்னும் எனக்குப் பிடிபட்ட பாடில்லை. ஆனால், என்னைக் காட்டிலும் அதற்குத் தெரியும். சொல் என்கையில், என் சொல் வெறும் வாய் வார்த்தை, எழுத்து மட்டில் அடங்கவில்லை. வாய் எனும் சத்தம், எழுத்து எனும் வரைகோடு, பூ! கண்ணோடு கண்ணோக்கின் வாய்ச்சொல் என்ன பயன் எனும் உன்னத காடாrத்தை, கம்யூனிகேஷனின் உச்ச கட்டத்தைத் தேடும் உயிர்த் தாதுவைச் சொல்லுகிறேன். பொடிக் கற்களுடன் கலந்து, குந்து மணிகள் பூமியில் இறைந்து கிடக்கின்றன. ஒரு பக்கம் சிவப்பு: மறு பக்கம் கறுப்பு. இரண்டையெடுத்து மண் பிள்ளையார் விழிகளில் பதித்ததும், உயிரின் உக்கிரம் வந்தாச்சு. படிக்க முடிந்தால் கடாகrத்தையும் பார். மண் பொம்மையும், குந்துமணியும், ஒன்றுக்கொன்று ஊட்டம். அதுவே பிள்ளையார். சொல்லுக்கும் பொருளுக்கும் இதுவேதான் உறவு.