பக்கம்:சிந்தாநதி-நினைவலைகள்.pdf/283

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

282 & சிந்தாநதி சொற்கள் வெறும் உமியாகி விடுவதோ, கத்தியை யிட்ட உறையாக மாறுவதோ, பிரயோகத்தைப் பொறுத்தது. சமயானிகி தகுமாட்ட உடல்மேல் சதை போலும், பொருள் மேல் படர்ந்து கொண்டு, பொருளை அடக்கிய சொல். என் குடும்பப் பரம்பரையில் தமிழ் மணம் உண்டு. என் பாட்டனார் தமிழ்ப் பண்டிதர். வரகவி. அவருக்குப் பதினாறு வயதில், பிள்ளையர் அவர் வாயில் கற்கண்டு போட்ட மாதிரி கனாக் கண்டு விழித்ததும், பாட ஆரம்பித்து விட்டார். அவருடைய தங்கை, என் தாயைப் பெற்றவள், நன்னூல், நைடதம் பயின்றவள். வரமாக அவரும் தன் பாட்டில் அமைந்திருக்கும் இலக்கணம் பற்றி, அண்ணன் தங்கையிடம் கேட்டுத் தெரிந்து கொள்வாராம். என் பாட்டனார் உடன் பிறந்தோர் எழுவர், ஆக எண்மரும் கம்ப ராமாயணத்தை அலசு அலசென்று அலசி அதிணின்றே மேற்கோள்கள் காட்டி விபரீத எதிர்வாதம் பேசுவார்களாம். அவர்களுக்கு முன்னால் என் கொள்ளுப்பாட்டி- என் பாட்டனாரின் தாயாரிடம் ஒரு மண்டலம் எங்கள் குலதெய்வம் அம்பாள் விளையாடினாளாம். ஏதேதோ அற்புதங்கள் நிகழ்ந்தனவாம். எழுதப் படிக்கத் தெரியாத கைநாட்டுப் பேர்வழியின் வாயிலிருந்து திடீரென வேதம், வியாகர்ணம், தர்க்கம், மீமாம்ஸம், தத்துவம் புறப் பட்டனவாம். கற்றறிந்த பண்டிதர்கள் எங்கெங் கிருந்தோ வந்து வியப்புறுவதுடன் விளக்கங்களை கேட்டு அறிந்து போவார்களாம். அந்த நாற்பத்து ஐந்து நாட் களும் பாட்டி ஒரு பருக்கைக் கூடச் சாப்பிடவில்லை; பட்டினியாம்.