பக்கம்:சிந்தாநதி-நினைவலைகள்.pdf/285

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

284 & சிந்தாநதி தனிக் கதி, அதுவே என் விதி. என் சொல்லின் கதி, grain Ego. சொல் எனும் நான், என் தன்மை, என் பொருள், என் தேடல், என் ஆரம்பம், என் முடிவு, என் மறு பிறவி, என்னைப் புதுப்பிப்பு, என் தருணம். குழந்தை பூமியில் விழுகையில், தாயின் வலியில் அவள் வீறல் கொச்சை, குழந்தையின் அழுகை கொச்சை. குழந்தை, பாலின் இடம் தேடிக் கண்டு சுவைக்கும் சமயம், அதனின்று வெளிப்படும் சத்தங்கள் கொச்சை, தாய், தன் பரிவு தாங்காமல், குழந்தையைக் கொஞ்சும் சமயம் அவர்களிடமிருந்து வெளிப்படும் குழறல்கள் கொச்சை. ஆணும் பெண்ணும் தழுவு கையில், அவர்கள் முத்தத்தின் எச்சிலில் கொழ கொழத்து வரும் சொற்கள் கொச்சை. கணவனையோ, குழந்தையையோ பறி கொடுத்தவளின் நாபி வீறல் கொச்சை. நியாய கோபத்தின் கர்ஜனை கொச்சை, தரிசன பரவசத்தின் விக்கல் கொச்சை, கொச்சையே சொல்தான். -ஆ! இங்கே தருணம் என்று ஒரு சொல் புகுந்து கொண்டது கண்டிரோ? தருணம் என்பது, நிமிஷம் என்றும், நொடியென்றும், விரலின் சொடுக்கென்றும் நேரத்தின் அளவு அல்ல.