பக்கம்:சிந்தாநதி-நினைவலைகள்.pdf/288

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

லா, ச. ராமாமிருதம் : 287 கொடுத்துவிட வேண்டியதுதான். மானேஜர் எரிந்து விழுவான். அது நாளை ஷமாச்சாரம்.' "நம் வீடு இதோ பெல்ஸ் ரோட் டர்னிங்தான். டைப் பைக் கொண்டு வந்துடுங்கோ. அங்கேயே ஷெய்யலாம்.” எவன் எழுதிக் கொடுத்தான்? வக்கீலா, டாக்டரா? என் தலையெழுத்து மாதிரி! ஆயிரத்தெட்டுச் சந்தே கங்கள் எழுத்தைப்பற்றி அல்ல, பத்திரத்தின் விஷயம் பற்றி பல இடங்களில் நானே பாஷையை சமயோ சிதத்ததில் இட்டு நிரப்பி, முதலில் ரஃப் ஒன்று தயார் பண்ணி, பிறகு முறையாக ஸ்டாம்ப் பேப்பரில் ஏற்றுவதற்குள் மணி இரண்டாகி விட்டது ஐயா உண்மையிலேயே சந்தோஷமாகிவிட்டார். அந்தக் காலத்து ராஜாக்கள், "என்ன வரம் வேண்டும் ?” என்று கேட்கிறமாதிரி- என்னா வேணும்? என்ன கேட்கலாம்? ஆள் மிரண்டுவிட்டால்? என் தயக்கத்தைக் கண்டு- "பரவாயில்லே. இஷ்டம் கேளுங்கோ: "பத்து ரூபாய்.” எனக்குக் கொஞ்சம் திணறிற்றோ? அவர் பதிலே பேசவில்லை. டக் கென்று சேஃபைத் திறந்து மொட மொடவென்று ஒரு பத்து ரூபாய் நோட்டைக் கொண்டுவந்து என்னிடம் கொடுத்துவிட்டு சேஃபை மூடினார். திறந்திருந்த நேரத்துக்கு குங்குமப்பூ வாசனை 'கும்.' பகவன் தாஸும் நானும் இப்படித்தான் பரிச்சய மானோம். அவருக்கு எம்ப்ராய்டரி பிஸினஸ். சொந்த வீடு. மாடியில் வாசம். கீழே அலுவலகம். இரண்டு பெரிய ஹால்களில் மூன்று பெரிய தறிகளில் ஏழெட்டு ஆட்கள் மெளனமாக வேலை செய்தனர். செய்துகொண்டே