பக்கம்:சிந்தாநதி-நினைவலைகள்.pdf/289

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

288 & சிந்தாநதி இருந்தனர். தங்க ஜரிகை, வெள்ளி ஜரிகை, ஜிகினாப் பொட்டுகள், அதிலேயே சின்னச் சின்ன வண்டுகள் வர்ண நூல்கள் தையலில், அற்புதமான பூக்கள், அன்னப் பகூதிகள், முதுகைக் கோதிக்கொள்ளும் புறாக்கள், மயில்கள், கோலங்கள், புடவையின் ஒரங்களில், தலைப்பில், புடவை பூரா உருவெடுத்தன. அத்தனையும் கை வேலை, பொறுமையும் அர்ப்பணமும் வாங்கும் வேலை. இதில் இறங்கினவர்கள் பின்னர் மற்றெதற்கும் உபயோகமில்லை. பரம்பரை வாசனையும் இருக்கும் போல் தோன்றுகிறது. தறிமேல் குனிந்தே, முதுகு கூனி, கண்ணும் மங்கி விடும். அதுபற்றிச் சேட்டுக்கு என்ன? கொள்ளை பிஸினெஸ். பல தர வயதில், உடல் வாகில்- அனேகமாக அவர் ஜாதிப் பெண்டிர்தான்- கார்களில் வந்து, புடவைகளு டன் இறங்குவார்கள். சில சமயங்களில், வரவேற் பறையில்- ஆபீஸ் அறையும் அதுதான். சோபாக்கள் நிரம்பி வழியும். பகவன்தாஸ், ஆளே அப்போது மாறிவிடு வதுபோல் தோன்றும். என்ன சிரிப்பு, முகத்தில் என்ன டால், இடுப்புவரை குனிந்து, வந்தவர்கள் பேச்சுக்கு என்ன கவனம், என்ன அந்த மரியாதை! அவர்களும் "தாதா! தாதா!' என்று அவரை மொய்த்துக்கொள் வார்கள். பேசிச் சிரித்துக் கொண்டிருக்கும் அந்தக் கூட்டத்தின் நடுவே கிழட்டுக் கிருஷ்ணன். மாலையில் வேலையாட்கள் அறை வாசலில் குழுமி நிற்பார்கள். வஹாப், மொய்தீன், சின்னக்கண்ணுா-' நவாப் தோரணைதான். ஒவ்வொருத்தராய்க் கூப்பிட்டு முலு முலுவென, சுள்ளெறும்பு ஊர்வது போன்ற தன் (ஸிந்தி) பாஷையில் (லக்கம் உள்பட) குறித்துக்கொண்டு, பட்டு வாடா பண்ணுவார்.