பக்கம்:சிந்தாநதி-நினைவலைகள்.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

9 - 弥 麗龜爵體墮 శ్రీః இது நடந்து இன்று மூன்று வருடங்களாகியிருக்கும். கதையைப் பாராட்டி-கதிரில் வெளியான மேனகை' என்றே நினைக்கிறேன்- கடிதம் ஒன்று வந்தது. ‘வெகு நாட்களாகிவிட்டன. உங்களுக்கு என்னை நினைவிருக் கிறதோ இல்லையோ' என்கிற ரீதியில் முடிந்து பாஸ்கர்: எழுதியிருந்த படியே நினைப்பு மழுப்பிற்று. பாஸ்கர்? எத்தனையோ பாஸ்கர்கள். பாஸ்கர், முரளி, பூரீகாந்த், குமார்-இட்ட பெயர் எதுவாயினும், அழைக்க இவை தான் இப்போது ஃபாஷன், கடைசியில் போயே பார்த்து விடுவதென. வருகிற எல்லாக் கடிதங்களின் விலாசங்களையும் தேடிச் செல்வது சாத்தியமா? அல்ல. எனக்குத்தான் கெளரவமா? ஆனால் இதற்கு மட்டும் ஏன் இத்தனை நெஞ்சு முள் இடறல் ? எதுவோ கட்டிப் பிடித்து இழுத்தது. தெரு முனையிலேயே ஆசாமி பார்த்துவிட்டார். எதிர் கொண்டு வந்து என்னைத் தழுவிக்கொண்டு உள்ளே அழைத்துச் சென்றார். எனக்கும் அடையாளம் விடிந்து விட்டது.