பக்கம்:சிந்தைக்கினிய சீறா.pdf/142

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

136

அறுவரையும் சந்தித்து இஸ்லாமிய போதனையை மேற்கொண்டார்கள் எம்பெருமானார் (சல்) அவர்கள். அடுத்த ஆண்டில் யத்ரிபிலிருந்து அந்த ஆறு பேரும் மற்றும் ஆறு பேருடன் வந்திருந்தனர். அவர்களை அக்பர் என்னும் இடத்தில் அண்ணல் நபி (சல்) அவர்கள் சந்தித்து மீண்டும் இஸ்லாமிய போதனையை மேற்கொண்டார்கள். இரண்டாவது தடவை வந்தவர்களும் அவ்ஸ், கஸ்றஜ் கோத்திரங்களைச் சேர்ந்தவர்கள் இருந்தனர். இவர்கள் இஸ்லாத்தை ஒப்புக் கொண்டு இஸ்லாமிய முறைப்படி ஒழுக இணங்கினர். இந்த ஒப்புதல் “அகபா வார்த்தைப்பாடு” என வழங்கப்படுகிறது. இங்ஙனம் யத்ரிபிலிருந்து பன்னிருவர் வந்து இஸ்லாத்தை ஒப்புக் கொண்டமையே இவ்வாறு விவரிக்கப்பட்டுள்ளது.

“தன்னுயி ரென்ன நீங்கார் தலைமையி னுரிய தோழர்
பன்னிரு வருக்கு நேர்ந்த பண்புட நெறிகள் கூறிப்
பின் அக பாவென் றோதும் பெருந்தலத் துறைந்து காட்சி
மன்னிய முகம்ம தின்றண் மலர்ப்பதம் வந்து கண்டார்,”

மதீனத்தார் வாய்மை விளக்கிய படலத்திலும் யத்ரிப் வாசிகள் வந்து வார்த்தைப்பாடு கொடுத்த விவரங்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

நபிகள் நாயகம் (சல்) அவர்கள் மக்கமா நகரிலிருந்து மதீனமா நகருக்குச் செல்லும் பொருட்டு அல்லாஹ்வின் உத்தரவை எதிர்பார்த்துக் கொண்டிருந்தார்கள். அவ்வாறு செல்லவேண்டிய நாளும் நிர்ணயிக்கப்பட்டன, அவ்வாறு செல்ல இருந்த நாளை இங்கு குறிப்பிடுகிறார். உமறுப்புலவர் இறைவனிடமிருந்து அண்ணல் நபி (சல்) அவர்களுக்கு நபிப்பட்டம கிடைத்த பதினான்காம் ஆண்டே றபீஉல் அவ்வல் மாதம் ஐந்தாம் நாள் திங்கட்கிழமை இரவினில் மக்கமா நகரிலிருந்து மதின மாநகருக்குச் செல்ல இருந்தார்கள் என்பது இவ்வாறு பாடப்பட்டுள்ளது.