பக்கம்:சிந்தைக்கினிய சீறா.pdf/167

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

161


அம் மாது சிரோமணியை வாயாற வாழ்த்துகிறார். பெண்களைக் கவிஞர் கொம்புக்கு ஒப்பிடுவர் கொம்பர் எனவழைப்பர் ஸெய்னப் (றலி) அம்மையாரைக் கொம்போ என விளிக்கிறார். கொம்பு வளர்ந்தோங்க அன்பு என்னும் வித்து அவசியம், அன்பு என்னும் வித்தில் தோன்றிய புண்ணியம் என்னும் வேரூன்றி, புகழ் என்னும் கிளைகள் பரப்பி, கற்பு என்னும் ஒப்பற்ற மலர் நெருக்கமாக மலர்ந்து, நாடோறும் இன்பம் என்னும் என்னும் காய்களைக் காய்த்து, ஏகஇறைவனான அல்லாஹ்வின் திருவருளே பழுக்கப் பெற்று வளர்த்தோங்கி இருந்தது. அந்த அழகே உருவான சகுசு (ஜஹ்ஷ்) என்பவரின் மகளான ஸெய்னப் நாச்சியார் என்னும் கொம்பே என உமறுப்புலவர் இவ்வாறு நயம்படப் பாடியுள்ளார்.

"அன்பெனும் வித்திற் றோன்றி யறமெனுஞ்சடைகள் விட்டுத்
தன் புகழ் தழைத்துக் கற்பாந் தனிமலர் செறிந்துநாளு
மின்பமாங் காய்கள் காய்த் திட் டிறையருள் பழுத்த கொம்பே
தென் பயில் சகுசு செற்ற செயினபு நாச்சியாரே".[1]

சடை என்னும் சொல் வேர் என்னும் பொருளிலும் தென் என்னும் சொல் அழகு என்னும் பொருளிலும் உபயோகப் பட்டுள்ளதைக் காணலாம் நபிகள் பெருமானாரின் அடிமையும், சுவீகாரப் புத்திரருமாகிய ஸெய்த் பின் ஹாரிஸா (றலி) என்பவர் இவரை மணந்தனர். இறுதியில் இருவரும் பிரிய வேண்டிய நிலை ஏற்பட்டது. ஸெய்த் (றலி) அவர்கள் தமது மனைவியைத் தலாக் சொல்லிவிட்டார்கள். அடிமையின் மனைவியாக இருந்தமையினால் அம்மாது சிரோன்மணி



11

  1. 1. சீறா செயினபு நாச்சியார் கலியாணப் படலம் 4