பக்கம்:சிந்தைக்கினிய சீறா.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

16

கிறார்சள்? ஒழுங்காய் நடுகிறார்கள், வரிசையாய் நடுகிறார்கள், இப்போது நாம் ஜப்பான் நடவு என்று சொல்லும் வரிசை நடவு அக்காலத்திலேயே தமிழ் நாட்டில் இருந்திருக்க வேண்டும். அது ஒன்றும் தமிழ்நாட்டிற்குப் புதி தல்ல என்று தோன்றுகிறது. மேற்பார்வைக்கு எவரும் உண்டா? இல்லை. இருந்தும் உழத்தியர் தங்கள் பணியை ஒழுங்காய்ச் செல்வனே செய்கின்றனர். எப்படி முதலாளி- தொழிலாளி உறவு? 'செழுமுகம' என்று சொல்வதில் எத்தலை நயம்? செழுமை என்றால் வளமை, செளந்தர்யம் என்று பொருள். உழத்தியர் வறுமையின்றி, மனநிறைவோடு வாழ்ந்தனர். அவர்களின் செளந்தர்யமான முகம் வளப்பத்தைப் பிரதிபலிக்கிறது. ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காண்பீர், எத்துணைப் பொருத்தம்? உழத்தியர் நிலையே இப்படி என்றால் ஏனையவர் எத்தகைய வள வாழ்வு வாழ்ந்திருப்பார்கள் என்பதைப் புலவர், வாசகரின் யூகத்திற்கு விட்டு விடுகிறாா. 'தொடு கடல்' என்ற பதத்தொடர் சிறப்புடையது. 'தொடு' என்ற சொல்லுக்குத் தோண்டன், மருதநிலம், வயல் என்றெல்லாம் பொருள் உண்டு மருத நிலக்கடல் என்று சொல்வதில் எத்தனை அழகு? தொடுகடல் என்பதற்கு இந்துப் புராணப் படி சாகர்களால் தோண்டப்பட்ட கடல் என்றும் கொள்ளலாம். வயல், கடல் போன்று பரந்துள்ளது. உழத்தியர் நடும் போது குனிவதும் நிமிர்வதுமாக இருக்கிறார்கள். அக்காட்சிக் கடலில் அலைகள் எழுவதும். அமைவதும் போலிக்கிறது. உழத்தியர் முகததிற்கு 'மறுவுடை முழுமதி' என்று ஏன் புலவர் உவமை சொல்கிறார். பிறிதோரிடத்தில் நபிகள் நாதரை வருணிக்கும்போது,

“.......இருளெனும் குபிரின்
குல மறுத்(த) அறநெறி விளக்க
மறு விலா தெழுந்த முழுமதி போல
முகம்மது நபி பிறந்தனரே”