பக்கம்:சிந்தைக்கினிய சீறா.pdf/238

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

232


(iii) சுறாக்கத்துத் தொடர்ந்த படலம்

(iv) உம்மி மகுபதுப் படலம்

(v) ஒநாய் பேசிய படலம்

(vi) பதுறுப் படலம்

(vii) அபூத்தல்கா விருந்துப் படலம்

(viii) உகுதுப் படலம்

(ix) சாபிர் கடன் தீர்த்த படலம்

(x), ஒட்டகை பேசிய படலம்

(xi) மழையழைப்பித்த படலம்

(xi) அந்தகன் படலம்

இப்படலங்களின் சுருக்கக் கருத்தின் மூலம் இயற்கை கடந்த செயல்களையும், பிற படலத்தினூடேயும் இடைமிடைந்து வரும் அதி நிகழ்வுகளையும் காண்போம்.

நபியவதாரப் படலத்தில்

சிக்கந்தர் துல்சுறுனைன் எனும் மாமன்னரின் அரசாட்சி காலத்திலிருந்து கணக்கிடப்படும் எண்ணுற்று எண்பத்தியோரம் ஆண்டு மக்கபுரி சோதனைக்குட்பட்டது. ரோமானியப் பேரரசின் ஏகாதிபத்தியம் கஃபத்துல்லாவைக் கைப்பற்றுவதற்காக ஒரு பெரிய யானைப்படையொடு முன் வந்தது. அந்த ரோமானியப் படைகள் ஆண்டவனுடைய அருளால் துரத்தப்படுகின்றன. இறை ஆனைப்படி ஆயிரமாயிரம் சிறு குருவிகள் சிறு சிறு கற்களை யானைகளின மீது போட்டு, அந்த யானைட்படையை அழித்து விட்டனர் இவ்வெற்றியாண்டினை யானையாண்டு என்பர். இதற்கு முந்திய ஆண்டிலே பெருமானார் (சல்) கருவுற்றார்கள் எனும் இச்செய்தியினை உமறு நபியவதாரப் படலத்தில் பாடியுள்ளார்.[1] இவ் உண்மை நிகழ்ச்சியினை "யானைப்படை அழிவு" என ( 105) அல்பீல் திருக்குர்ஆன் பகருகிறது.[2] நபிபெரு


  1. 1.(அ) வீசு தெண்திரை........வருடம் (சீறா) (ஆ) கரைத்தமின்............ வருடம் "
  2. 2.அன்வாறுல் குர்ஆன்: 1971 அம்மஜீல் உவின் தமிழ் தப்ஸீர். அப்துற் ரஹமான் E. M. பக் 86.