பக்கம்:சிந்தைக்கினிய சீறா.pdf/266

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

260


'எண்ணிறந் தனைய கால மிருந் திறை யேவன் மாறி
விண்ணில மிழந்து மெய்ம்மை விதிமறை தனக்கு நாணி
மண்ணிலத் திருந்து வாழு மானிட ரெவர்க்கும் வெய்ய
தண்ணிய னிபுலீசு சென்னுந் தனிப்பெரு நாமத் தானே.” [1]

என வர்ணிக்கும் அழகுதான் என்னே!

உமறுப்புலவர் காட்டும்-உருவகிக்கும் இபுலீசின் குணக் கேடுகளிலிருந்து நீங்குவோமாக, சைத்தானின் (இபுலீசு) தீக்குணங்களினின்றும் வெகுதூரம் விலகி-நீங்கி நல்லடியார்களாகச் சமைவோமாக!

புலவரேறு உமறு காம்மாப் படலத்தில் இபுலீசினை. வடித்தெடுத்து அவன் பெயரினை,

'வானுல கடங்கத் தன்வசப் படுத்தி
   மறுவறும் பெயர்க்கிடர் விளைத்துப்
பாணிற வளைவெண் டிரைக்கடற் பரப்பிற்
   பகையற வொருதணிக் கோலாற்
றானெனச் கெலுத்தி யரசுவீற் றிருந்தோன்
   றணப்பிலாப் பெரும்படை யுடையோ
னீனமுற் றொழியா மாயைகள் விலைக்கு
   மியலபு லீசெனும் பெயரோன்," [2]

[வானங் கவிந்த பூலோகம் எவ்விடங்களுமொரு சொல்லில் அடங்கத் தன் வசப்படுத்திக் குற்றமற்ற நெறி நீதியோர்களுக்கு இடர்விளைவித்து, வெண்ணிறச் சங்கினங்களுர்ந்து திரிகின்ற கடல் வளைந்த உலகத்திற் பகையின்றி யொப்பற்ற தனிச் செங்கோல் தன்னையன்றி வேறில்லை

  1. 1. சீறா. ஜின்கள் ஈமான் கொண்ட படலம் 6,
  2. 2. சீறா. காம்மாப் படலம் 6