பக்கம்:சிந்தைக்கினிய சீறா.pdf/284

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

278


என்றும் புறுக்கான் ஒரு புது வேதம் என்பதனை,

"புதுமறை யெனும்புறுக் கானில்".[1]

என்றும் புறுக்கான் வேதம் நாள் தோறும் மோட்சப் பலனை அளித்துக் கொண்டிருக்கும் என்பதனை

"...............நாளுங்
கதிதருமென் புறுக்கான்,....." [2]

என்றும் மனத்தெளிவை ஏற்படுத்தும் வேதம் புறுக்கான் என்பதனை

"............தெளிதரும் புறுக்கான்
மறைமொழி......" [3]

என்றும் புறுக்கான் வேதம் முறைமையானது மட்டுமல்லாமல் நல்ல வழியிலே மக்களை இட்டுச் செல்லக்கூடியது என்பதனை,

"நெறியொடும் புறுக்கா னன்னேர்........" [4]


என்றும் புறுக்கான் வேதம் பொருந்துதற்கு அருமையான ஒப்பற்ற வேதம் என்பதனை,

"பொருத்துரும் புறுக்கான் வேதம்" [5]

என்றும் வருணித்துள்ளமை ஈண்டு நோக்கற்பாலது.

சீறாப்புராணத்திற்கு குர்ஆன் என்னும் அரபுச் சொல் அடை அடுத்த சொல்லாகவும் அடை இல்லாமலும் பயன் படுத்தப்பட்டுள்ளன. 'குறானையும் விரித்துக் காட்டி' (மதீனத்தார் ஈமான் கொண்ட படலம் 9) என அடை இல்லாமலும் தீன் முதன் முறைமைத்தாய விரிதருங் குறானை யோதி'


  1. 1. சீறா. மதியை அழைப்பித்த படலம் 186
  2. 2.சீறா புத்து பேசிய படலம் 2
  3. 3.சீறா சல்மான் பாரிசுப் படலம் 6
  4. 4.சீறா. பதுறுப் படலம் 1
  5. 5.சீறா மழையழைப்பித்தப் படலம் 9