பக்கம்:சிந்தைக்கினிய சீறா.pdf/285

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

279


(மதீனத்தார் ஈமான் கொண்ட படலம் 30) அருங்கு றானை (மதீனத்தார் ஈமான் கொண்ட படலம் 37) 'பொருவிலாக் குறான்" (விருத்திட்டு ஈமான் கொள்வித்த படலம் 14) 'பொருந்திரை குறானை யத்தின் (செயினபு நாச்சியார் கலியாணப் படலம் ) 'தேறிய குறானா யத்தின்’ (செயினபு நாச்சியார் கலியாணப் படலம் 9) 'நன்றி சேர் குறான்' செயனபு நாச்சியார் கலியானப் படலம் 16) என அடை அடுத்து வந்திருப்பதைக் காணலாம்,

'ஓதுவீராக’ எனப் பொருள்படும் 'இக்றஉ' என்னும் சொல்லைக் கொண்டு ஆரம்பிக்கும் திருமறை வாக்கியங்கள் (ஆயத்தகள்) ஐந்தே முதன் முதலில் அண்ணல் நபி (சல்) அவர்களுக்கு அருளப்பட்டன. 'இக்ற உ' என்பதில் தொடங்கி 'மாலம் யஃலம் என முடிவடைகின்றன. அந்த ஐந்து வாக்கியங்களும், இது பற்றி உமறுப்புலவர் குறிப்பிடுகிறார். 'இக்றஉ’ என்னும் சூறத் (அத்தியாயம்) திலிருந்து நான்கு ஆயத்துக் (வாக்கியங்)கள் 'மாலம் யஃலம்' வரை முதன் முதலில் நபிகள் பெருமானாருக்கு அருளப்பட்டன எனக் குறிப்பிடுகிறார்.

"இக்றஉ வெனுஞ்சூ றத்தி விருந்தநா லாயத் தின்ப
மெய்க்குற மாலயம் பஃல வெனுமட்டும் விளம்புவீரென்று" [1]

என சீறாப்புராணத்தின் அச்சுப் பிரதிகளில் காணப்படுகின்றது. 'இக்றஉ’ என ஆரம்பிக்கும் சூறத்தில் மாலம் யஃலம் வரை உள்ள ஆயத்துக் (வாக்கியங்)களின் எண்ணிக்கை ஐந்து என்றே திருக்குர்ஆனிலே குறிப்பிடு கின்றது. எனவே உமறுப்புலவரின் பாடல்,

"இக்றவு வெனுஞ்சூ றத்தி லிருந்தநா லாயத் தின்ப
மெய்க்குற மாலம் யஃல வெனுமட்டும் விளம்புவீரென்று" [2]

  1. 1. சீறா. நபிப்பட்டம் பெற்ற படலம் 27
  2. 2. சீறா. நபிப்பட்டம் பெற்ற படலம் 27