பக்கம்:சிந்தைக்கினிய சீறா.pdf/318

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

312


இஸ்லாம் என்னும் சொல் பல இடங்களில் சீறாப் புராணத்தில் இடம் பெற்றுள்ளன. அவையாவன: தொழுகை வந்த வரலாற்றுப் படலம் 5, 15, 17. தீனிலை கண்ட படலம் 48, 121, 143, உமறு கத்தாப் ஈமான் கொண்ட படலம் 92, உடும்பு பேசிய படலம் 18, உத்துபா வந்த படலம் 11, ஹபீபு ராஜா வரிசை வர விடுத்த படலம் 7. 15, ஒப்பெழுதித் தீர்த்த படலம் 52, உம்மி, மகுபதுப் படலம் 20, 23, சல்மான் பாரிசுப் படலம் 38, குதிரிப் படலம் 1, தியம்றுப் படலம் 3, உசைனார் பிறந்த படலம் 16, தாத்துற்றஹாக்குப் படலம் 30, உயை வந்த படலம் 37, பனிகுறைலா வதைப் படலம் 9, உமுறாவுக்குப் போன படலம் 90, இதே போன்று முஸ்லிம் என்னும் சொல்லும் சீறாப்புராணத்தில் ஆங்காங்கே ஆளப்பட்டிருப்பதைக் காணலாம். அசனார் பிறந்த படலம் 13, 2.உகுதுப்படலம் 253, முறைசீக்குப் படலம் 27, நயவஞ்சகர் என்னும் பொருளில் முனாபிக்கீன் என்னும் அறபுச் சொல் (திருக்குர்ஆன் (4:51, 85, 138, 140, 142, 143) சீறாப்புராணத்தில் 'மதீனா, மிக்கமுனாபிக்குகளுமேவியர் தமக்கு' (சுகுறாப் படலம் 12) என ஆளப்பட்டுள்ளது.

தொழுகையுடன் சம்பந்தப்பட்ட வேறு அறபுச் சொற்களும் சீறாப்புராணத்தில் இடம் பெற்றுள்ளன. அத்தகைய சொற்களுள் ஒன்று றக்கஅத் ஒவ்வொரு தொழுகையும் இத்தனை றக்கஅத்துக்களைக் கொண்டது என இஸ்லாத்தில் வரையறுக்கப்பட்டுள்ளது. ஒரு சந்தர்ப்பத்தில் அண்ணல் நபி (சல்) அவர்கள் தங்களுக்கு வெற்றி அளிக்கும்படி அல்லாஹ்வைப் பிரார்த்தித்தார்கள். இரண்டு றக்கஅத்துக்கள் தொழுது நெடியவனான அல்லாஹ்விடம் வேண்டினார்கள். இதுவே சீறாப்புராணத்திலே இவ்வாறு இடம் பெற்றுள்ளது,