பக்கம்:சிந்தைக்கினிய சீறா.pdf/326

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

320


பதுறுப் போரின் போது அல்லாஹுத் தஆலாவிடம் குறை இரந்து அண்ணல் நபி (சல்) அவர்கள் பாத்திஹா ஓதினார்கள் என்பதனை,

"கந்து கத்திருந் தருமறை பாத்திஹா வோதி."[1]

என உமறுப்புலவர் குறிப்பிட்டுள்ளார். இதே போன்று உகுதுப்படலம் போரிலும் பெருமானார் நபி (சல்) அவர்கள் குறை இரங்கிப் பாத்திஹா ஓதியவர்,

"தருவெ னத்தருந் தூதருந் தடக்கர மலர்த்தி யரும றைச்செழும் பாத்திஹா வோகின ரன்றே."[2]

எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. அபீதாலிப் அவர்களின் மனைவியும் அலி (றலி) அவர்கள் தாயாருமாகிய பாத்திமா அம்மையாரின் மறைவைப்பற்றி விவரித்த அண்ணல் நபி (சல்) அவர்கள் கூறியவற்றைக் கேட்டுக் கொண்டிருந்த அனைவரும் உவகை அடைந்தவர்களாய் அனுதாபத்தோடு பாத்திஹா ஓதித் தத்தம் வீடுகட்குச் சென்றனர் என்பது,

"திருநபி தருமொழி செவியிற் கேட்டது
மொருவருக் கொருவருள் ளுவகை கூர்ந்துநற்
பரிவொடும் பாத்திஹா வோதிப் பண்புடன்
மருவிய மனைவிடம் வந்து புக்கினார்." [3]

என விவரிக்கப்பட்டுள்ளது.

பாத்திஹா என்னும் அறபுச் சொல்லோடு நெருங்கி இணைந்த மற்றொரு அறபுச் சொல் 'துஆ' ஒன்பது. துஆ என்பதனைப் பிரார்த்தனை என்றும் கூறலம். ஸலாத் என்னும் அறபிச் சொல்லும் ஒரு வகைப் பிரார்த்தனையே யாதலால் பிரார்த்தனை என்று கூறும்போது இரண்டுக்கும் இடை

  1. 1.சீறா பதுறுப் படலம் 116
  2. 2,சீறா உகுதுப் படலம் 78
  3. 3.சீறா. உசைனார் பிறந்த படலம் 19