பக்கம்:சிந்தைக்கினிய சீறா.pdf/364

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

358


"ஆர்" என்பது தமிழ் இலக்கண மரபுக்கிணங்க மரியாதைப் பன்மை விகுதியாக உபயோகிக்கப்படுகிறது. அடியார் என்பதனை இதற்கு உதாரணமாகக் காட்டலாம். தகப்பனார் என்பது மற்றொரு உதாரணமாகும் அண்ணல் நபி (சல்) அவர்களின் மருகரும் நான்காவது கலிபாவுமாகிய அலி இப்னு அபீதாலிப் (றலி) அவர்கள் பொதுவாக அலியார் என அழைக்கப்படுகிறார். இங்கே அலி என்னும் சொல்லுடன் மரியாதைப் பன்மை விகுதியாகிய ஆர் புணர்ந்துள்ளது என்று கூறுவதை விட கலிபாக்களைக் குறிப்படும் யார் என்னும் பாரசீகச் சொல் சேர்ந்தே அலியார் என வந்துள்ளது எனக் கூறுவது சாலப் பொருத்தமுடைய தெனலாம். நான்கு கலிபாக்களையும் பொதுப்படையாகக் குறித்த யார் என்னும் பாரசீகச் சொல் அலி (றலி) அவர்களைச் சுட்டச் சிறப்பாகப் பயன்படுத்தப்பட்டிருக்கலாம். உமறுப்புலவரும் அலியார் என்பதை

"ஆமென மகிழ்ச்சி யாகி யகுமது மலியார்தமிமை
தாமரு ளுடனே கூவி யெழுதெனச் சாற்றுகின்றார்,"[1]

என்று அமைத்துப் பாடியுள்ளார்.

பாரசீக மொழியில் 'ஆப்' என்றால் நீர் என்பது பொருள். இஸ்லாமிய அடிப்படையில் தோன்றிய தமிழ்க் காப்பியங்களிலே ஆப் என்னும் பாரசீகச் சொல் சிறப்பான ஒரு வகை நீரைக் குறிக்கவே பயன்படுத்தப்பட்டுள்ளது. மக்க மாநகரிலே கஃபாவுக்கு அணிந்தாயுள்ள ஸம்ஸம் என்னும் புனிதக் கிணற்றின் நீரைக் குறிப்பிடவே ஆப் என்னும் பாரசீகச் சொல் பயன்படுத்தப்படுகிறது. அந்நீர் 'ஆபுலஸம்' என்றே வழங்கப்படுகிறது. அண்ணல் நபி (சல்) அவர்களின் திருமணத்துக்குச் சற்று முன்னர் ஆபுஸம்ஸம், என்

  1. 1. சீறா உமுறாவுக்குப் போன படலம்