பக்கம்:சிந்தைக்கினிய சீறா.pdf/365

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

359


னும் ஸம்ஸத்து 'நீரினால் நீராட்டப்பட்டார்கள் என்று வருணிக்கப்பட்டுள்ளது சிற்ப வல்லுநரால் இயற்றப்பட்ட ஒரு பலகையிலே அண்1ைல் நபி (சல்) அவர்கள் அமர்த்தப் பட்டார்களாம். வேதத்தில் வல்லவர்கள் மங்கல வாக்கியங்கள் முழங்கினார்களாம். ஸம்ஸம் கிணற்று நீரைப் பொன்னினாலான குடத்தில் எடுத்தார்சளாம். எடுத்து அண்ணல் நபி (சல்) அவர்களின் தலையில் வார்த்தார்களாம். நீராட்டினார்களாம். பொற்குடத்திலிருந்து தலையில் நீர் வார்க்கப்பட்ட காட்சி சந்திரன் தனது கிரணங்களைப் பொன்னி மாமலையின் மீது சொரிவதைப் போன்று இருந்ததாம். உமறுப்புலவரின் கற்பனைமிக்க அந்தச் செய்யுள் இவ்வாறு அமைந்துள்ளது.

"அற்புதமாய் விண்ணவரும் புகலரின் ஆபுலம்சத்தரிய நீரைப்
பொற்குடத்தி லெடுத்தமுதக் கதிர்கிரன மலைமிசையே பொழிவ போல
சிற்பரியற் றியபலகை நடுவிருத்தி முகம்மது தஞ்சிரசின் மீதே
சொற்பழுத்த மறைமுதியோர் மங்கலவாக் கியங்கறங்கச் சொரிந்தா
                  ரன்றே" [1]

புனித கிணறான ஸம்ஸத்திலிருந்து நீர் தெளிக்கப்பட்டது என்பதைக் குறிப்பிட வந்த உமறுப் புலவர்,

"அருங்கதிர்க் கலசத் தாபுஸம் ஸத்தி னரியநீர் கரங்கொடு தெளித்தே.” [2]

என்று வருணித்துள்ளார். அப்பாஸ் (றலி) அவர்கள் மூதாதையர்களே ஸம்ஸ் த்தின் நீரை விநியோகிக்கும் பொறுப்பைப் பெற்றவர்களாக இருந்தார்கள், பதுறுப் போர் முடிவுற்றதும் அண்ணல் நபி (சல்) அவர்களும் அப்பாஸ் (றலி) அவர்களையே அப்பொறுப்பைத் தொடர்ந்து ஏற்று வரும்படியாக நியமித்து அனுப்பினார்கள். இதனை ஏற்ற

  1. 1. சீறா, மணம்புரி படலம் 23
  2. 2. சீறா. தசைக் கட்டியைப் பெண்ணுருவமைத்த படலம் 7