பக்கம்:சிந்தைக்கினிய சீறா.pdf/366

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

360


அப்பாஸ் (றலி) அவர்கள் எல்லோரிடமும் கூறிவிட்டு காவலுடைய மக்க மாநகரத்துக்குச் சென்றார்கள் என்பதனையே உமறுப்புலவர் இவ்வாறு வருணிக்கிறார்.

"வரத்திதிற் சிறந்த ககுபத்துல் லாவி
   னாபுசம் சத்தினீர் வழங்கும்,"
துரத்தி னுக்குரிய ராதலாற் பிரியாத்
   தொன்முறை வருதலா னபிக்கும்
புரத்தினுற் யவர்க்குந் தனித்தனி யுரைத்துப்
   புதியவன் றனைப்புகழ்ந் தேத்திக்
கரத்தடக் களிறப் பாசெனு முரவோர்
   கடிகொடம் பதியிடை புக்கார்." [1]

நாள்தோறும் முஸ்லிம்களாகிய எமது காதுகளிலே ஒலித்துக் கொண்டிருப்பது அதான் என்னும் ஓசை. முஸ்லிம்களைத் தொழுகைக்கு அழைக்கவே அதான் தினசரி ஒலிக்கப்படுகிறது. அதனைப் பண்ணோடு ஒலிப்பவரை முஅத்தின் என்பர். ஆனால் முஸ்லிம்களின் சிறப்பாக தமிழ் பேசும் முஸ்லிம்களின் பெருவழக்கிலே அதான் என்னும் அறபுச்சொல் இடம்பெறுவதில்லை. மாறாக அதற்குச் சமமான பாரசீகச் சொல்லான பாங்கு என்பதனையே பெரிதும் உபயோகிப்பர். அதான் ஒலி எழுப்பவரை முஅத்தின் என்று கூறும் அதே வேளையில் அதான் என்பதனை அறபியில் குறிப்பிடாது பாங்கு என பாரசீகத்தில் வழங்குகிறோம். இஸ்லாமிய அடிப்படையில் இலக்கியம் யாத்த கவிஞர்களும் இதற்கு விதி விலக்காக அமையவில்லை. அவர்களும் தத்தம் இலக்கியப் படைப்புகளிலே பாங்கு என்னும் பாரசீகச் சொல்லால் அதானை அழைப்பதையே பெரிதும் விரும்பி னார்கள் போலும். ஒரு நாளுக்கு ஐந்து முறை முஸ்லிம்களைத் தொழுகைக்கு அழைக்க பாங்கு ஒலி எழுப்பும் முறை புகுத்தப்பட்டது என்பதை உமறுப்புலவர் இவ்வாறு குறிப் பிடுகிறார்.

  1. 1. சீறா. பதுறுப் படலம் 255