பக்கம்:சிந்தைக்கினிய சீறா.pdf/367

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

361


"இற்றைநாட் டொடுத்தைந் தொகுத்தினும் வாங்கென்
றியற்றிய திருமொழி சிதையா
துற்றுவ ரெவருங் கொணர்மின் னெனவு
முடையவன் றிருநபி யுரைத் தார்." [1]

பாங்கு என்னும் பாரசீகச் சொல் முஸ்லிம்கள் பெருவழக்கிலே மாற்றமடைந்து வாங்கு என்று பயன்படுவதைக் காணலாம். பாத்திமா (றலி அவர்களின்) புதல்வன் அஸன் (றலி) அவர்கள் பிறந்ததைத் தொடர்ந்து அண்ணல் நபி (சல்) அவர்கள் குழந்தையைக் கையில் எடுத்து வலது பக்கக் காதில் பாங்கினையும் இடது பக்கக் காதில் அதானின் சுருக்கமான இக்காமத்தினையும் ஓதினார்கள் என்பதனை உமறுப் புலவர்:

"தீங்க கற்றிய மகள்மகன் வலத்திருச் செவியின்
வாங்கு ரைத்திடக் காதணிக் காமத்தும் வழங்கி" [2]

என அமைத்துப் பாடியுள்ளார். உகுதுப்போர் முடிவடைந்த பின்னர் அண்ணல் நபி (சல்) அவர்கள் ஒரு தீனவரை அழைத்து பாங்கு கூறும்படி சொன்னார்கள், அப்படியே பாங்கு ஒலிக்கப்பட்டது. இச் செய்தியே இவ்வாறு பாடப்பட்டுள்ளது.

"ஈறி லாதவன் றிருநபி யின்ன மிருந்த
வாறு கண்டொரு தீனவர் தமைவர வழைத்துத்
தேறி யிக்கள நடுநின்று வாங்கினைத் திருந்தக்
கூறு மென்றன ரென்றலும் வாங்கினைக் குறித்தார்." [3]

"உற்ற வாங்கிதங் கேட்டலு மொருதலை யெடுத்துச் சுற்று நோக்கின கண்டமு சாவெனத் துணிந்து

  1. 1. சீறா. உகுபான் படலம் 10
  2. 2. சீறா. அசனார் பிறந்த படலம் 14
  3. 3. சீறா உகுதுப் படலம் 266