பக்கம்:சிந்தைக்கினிய சீறா.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

31


இவ்வாறு வாய் இனிக்க, படிப்போருக்கு நாவினிக்க, நெஞ்சினிக்கப் பாடிய இப்பெருமக்கள தமிழை முறையாகக் கற்று தமிழின் இலக்கிய பாரம்பரியத்தை இசைவோடு ஏற்று புத்திலக்கியம் படைத்த மேதைகளாவர்.

"யாரால் பிறர் நலம் பெறுகிறார்களோ அவர்களே சிறந்த மனிதர்கள்," என்று வள்ளல் நபிகள் பெருமானார் கூறியுள்ளார்கள். இது இலக்கியப் படைப்பாளர்க்கு மிகவும் பொருந்தும் ஏனென்றால் குறுகிய கால உலக நன்மைகளையும் இலாபங்களையும் கருத்தில் வைத்து, மக்களின் கீழ்த்தர உணர்ச்சிகளைத் தூண்டி அதனால் பயன் அடைய முற்படுபவர்கள் எழுத்தாளர்கள் அல்லர். மாறாக மனித குலத்துக்கே தீமை விளைவிக்கும் எதிரிகள் அவர்களே தாம் .

ஆண்டவன் தன் திருமறையில்:

"இன்று உங்களுடைய மார்க்கத்தை உங்களுக்குப் பூரணமாக்கியிருக்கின்றேன்.உங்கள் மீது என் அருள் கொடைகளையும் நிறைவுபடுத்தியிருக்கிறேன். மேலும் இஸ்லாமிய நெறியை உங்களுக்குப் பொருத்தமுடையதாய் ஆக்கியுள்ளேன்' என்று கூறியுள்ளான், இத் திருவசனத்தில் குறிப்பிட்டுள்ள அருள் கொடையில் எழுதுகோல் முக்கியமாவது, ஏனென்றால் "அல்லம பில்கலம்" எழுதுகோலைக் கொண்டு கற்றுக்கொடுத்தான்,' என்றுதானே முதன் முதலாகத்தான் அருளிய ஐந்து திருவசனங்களில் ஒன்றில் குறிப்பிடுகிறான்.

எனவே தான் இந்த அருள் கொடையை பயன்படுத்துவதில் எழுத்தாளர்கள் மனித குலத்தின் தன்மையை குறிக்கோளாக மனதில் கொண்டிருத்தல் வேண்டும்.

இஸ்லாமிய இலக்கியங்களை மேலோடு பார்ப்பவர்களுக்குக்கூட, இத்தத்துவம் இஸ்லாமிய எழுத்தாளர்களின் படையல்களில் இழைந்திருப்பதைக் காண முடியும்.

மெளலவி எம். அப்துல் வஹ்ஹாப், எம். ஏ. பி.டி.எச்.