பக்கம்:சிந்தைக்கினிய சீறா.pdf/384

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

378

குருத்து; சறகு-பொன் கதிர்; தீன்-பைங்கூழ் உருவகங்களாக ஒளிர்கின்றன. வேறோர் இடத்தில், வேதம்-வித்து, ஈமான்- வேர்; இஸ்லாம்.பைங்கூழ்; (163) எனவும் உருவகங்கள் காணப்பெறுகின்றன.

கலிமாவைப் பற்றிக் கூறவந்த இடங்களில், புலவர் பனீ பகரும் பாச்சொற்கள் (சோறு) பாகாய்ப் பாய்ந்து இதயத்தை இனிக்க வைக்கின்றன, (உமறுப்புலவரின் இத்திறனை ‘சீறாப்புராணம்’. அறபுச்சொற்களும் பாரசீகச்சொற்களும்'-டாக்டர் எம்எம் உவைஸ் அவர்கள் கட்டுரையில் காண்க. இனி சின்னச்சீறா பகருவதைப் பார்ப்போம்:

"நற்கலிமா , 1583), சுந்தரக் கலிமா (1581), 'தூய ஆரணக் கலிமா (1558) பழுத்து அழுதொழுகிய தீனில் திருந்து மெய்க் கலிமா (338)' உத்தம்க் கலிமா (613) தேன் இருத்திய சொற் கலிமா' (1158) நற்றவக் கலிமா (1159) 'மவுலு நற்கலிமா (1161) தெள்ளிதாகிய சொற் கலிமா, (1121) மறையின் தீஞ்சொல் மேய் நல்கலிமா' (1070) 'அருங்கலிமா' (1235) மறைமொழிக் கலிமா, (555) 'மறை நெறிக் கலிமா என்னும் தேறல், (1428) என்பனவாம்.

இஸ்லாமிய இலக்கியங்களின் தனிச்சிறப்பான, அரபுச் சொற்கள் விரவிய தமிழ்ப் பாக்கள் சின்னச்சீறாவிலும் சிறந்து நிற்கின்றன. முஸ்லிம் தமிழ்க் காப்பியங்களின் வரும் அரபுச் சொற்களின் விளக்கங்களை தமிழ்க் காப்பியங்களில் வரும் அரபுச் சொற்களின் விளக்கங்களை கலாநிதி உவைஸ் அவர்கள் தொகுத்துள்ள தொண்டு இவண் குறிப்பிடத்தக்கது.

இதுகாறும் சின்னச்சீறா-உமறுப்புலவரின் சீறா புராணத்தை முற்றுப்பெறச் செய்கின்ற இணைப்புக் காப்பியமாக-ஒட்டுத்துணைக் காப்பியமாக அமைந்துள்ள திறம் கண்டோம், புலவர் பனீ அகமது மரைக்காயர் தரும் செய்திகளும் சீன்னச்சீறாவின் ஒட்பமும் திட்பமும் ஒருவாறு கண்டோம். ஆய்வார்கள் மேலும் ஆய்ந்து ஆய்ந்து சீறா-சின்னச்சீறா இவற்றின் புகழ் விரித்துரைக்கின் நாடும் ஏடும் சீறா தந்த உம்று நற்பயன் பெறுமென நவிலவும் வேண்டுமோ!