பக்கம்:சிந்தைக்கினிய சீறா.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

35


அத்தகைய மரபுகளுள் ஒன்று முஸ்லிம்கள் எந்தவொரு நல்ல காரியத்தையும் துவங்கு முன்பாக "பாத்திஹா'வும்" "துஆ" வும் ஓதுவதாகும், பாத்திஹா என்பது திருக்குர் ஆனின் முதல் அத்தியாயத்தின் பெயராகும். "தோற்றுவாய்" எனப் பொருள்படும் அதனையும் திருமறையின் இறுதி மூன்று அத்தியாயங்களையும் ஓதிய பிறகு துஆ எனும் பிரார்த்தனையையும் ஒதுவார்கள். இவ்விரு செயல்களையும் சேர்த்தே பாத் திஹா ஓதுதல் என்று குறிப்பிடுவதுண்டு. து ஆவினை ஒருவர் ஓதும்போது "அவ்வாறே ஆகுக!" என்னும் கருத்தில் அருகிலிருப்போர் ஒவ்வொரு வசனத்திற்கும் ஆமீன் என்று கூறவர். இச்செயல்களை உமறுப்புலவர் சீறா வில் பலவிடங்களின் வருணித்துள்ளார்.

மலிபொலன் கிரியிற் சோதி மணியினை இருத்தல்போல
அலியிடத திருத்தும் பாவை அழகுகண் டுவந்துமேலோர்
ஒலிகடல் கிளர்ந்த தென்ன உற்றவ ரெவருஞ்சூழ்ந்து
பலனுற வாழ்த்தி வாழ்த்திப் பாத்திஹா ஒதுங்காலை.

என்று பாத்திமா திருமணப் படலத்திலும் (181)

உலகினிற்கரு தவர்க்கடல் அரிஉம றினைக் கொண்
டலத பூஜகி லினை கொடு தீனிலை அதனைப்
பெலனு லும்படி எனக்கருள் பிறிதிலை எனவே
நலனொ டும்துஆச் செய்தனர் முகம்மது நபியே.

என்று உமறு கத்தாபு ஈமான் கொண்ட படலத்திலும் (3)

இந்த நன்மொழி இறையவ னிடந்திரந் தேத்தி
அந்த ரத்தினில் அமரர் ஆ மீன் ஒலி அதிரக்
கந்து கத்திருந் தருமறை பாத்திஹா ஒதிச்
சுந்த ரப்புயத் துணைவரை அருளொடு நோக்கி,"

என்று பதுறுப்படலத்திலும் (116) மேற்சொன்ன இஸ்லாமிய மரபுகளை உமறு காட்டியுள்ளார்.