பக்கம்:சிந்தைக்கினிய சீறா.pdf/424

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



418


சாலவும் சிறந்த தருவினம் தழைப்பத்
    தரவரும் இனியமென் மொழியாள்". [1]


'இனிமையில் பால் போன்றது; ஆனால் வெள்ளையாக (பொருளற்று) இராது. சனிபோன்று சுவைக்கும்; ஆனால் அழுகிச் சிதைந்துவிடாது. மணமடல் தேன் போன்று தித்திக்கும்; ஆனால் சிதறி விடாது. கரத்தில் ஏந்தியுள்ள கிளிமொழி போல் சுகந்தரும்; ஆனால் குழறு மொழியாக இராது' என எடுத்தும் மறுத்தும் விளக்கி 'செத்து மடிந்த தருவினம் தழைக்கும்படி பாற்கடல் பிறந்த அமுத மழையாகப் பொழிந்தது போன்ற இன்மொழியாள்’ என வர்ணிப்பதில் சொல்லின்பம் ஊறிப் பெருகி விடுகிறது. இவ்வாறு எடுத்தும் மறித்தும் உவமையின் இயல்பைக் குறைத்தும் பொருளின் சிறப்பை விளக்குவது எதிர்மறுப்பு உவமையாகும்.

உவமையும் மழலையும்

மாலை உவமம் என்று ஒன்று இதில் வந்த கருத்துக்களும் சொற்களும் மீண்டும் மீண்டும் வரும். உறவும் தொடர்பும் உள்ள பொருட்கள் ஒன்றோடொன்று இணைந்து மாலை போல் அமையும். உமறுப்புலவர் மாலை உவமம் புனைவதிலும் சிறந்து விளங்குகின்றார். சான்றாக ஒரு மாலை:

சுந்திரப்புலியன்ன அலிக்கும் பெண்ணிலங்கனி பாத்திமா நாயகிக்கும் திருமணம் செய்ய நிச்சயிக்கப்படுகிறது. மணச் செய்தியை மாநகர்க்கு அறிவிக்கின்றனர். மங்கள செய்தி கேட்ட மதீனா மக்கள் மகிழ்ச்சிப் பெருக்கில் திளைக்கிறார்கள். பரவசத்தால் உந்தப்பட்ட பாவையரின் செயல்களைப் பாருங்கள்!

"பாடு வார்சிலர் குயிலெனப்
   பாடலுக்கு எதிரின்

  1. 1. சீறா. தசைக்கட்டியைப் பெண்ணுருவமைத்த படலம் 24