பக்கம்:சிந்தைக்கினிய சீறா.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

37

கொண்டபின் பிரத்தி சொன்ன குதா திரு வசன நோக்கி அண்டர் நா யகனைப் போற்றி ஆதம்ஒன் ரைப்ப தானார்.[1]

முஸ்லிம்களின் திருமணத்தின்போது மணமகன் மன மகளுக்க 'மஹர்' என்றொரு தொகையைக் கொடுப்பதாக ஒப்புக்கொண்டு அவ்விதமே கொடுக்கவேண்டும். சீறாவில் திருமண நிகழ்ச்சிகளை வர்ணிக்கும் பல இடங்களில் இம்மரபு தவறால் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. உதாரணத் திற்கு, பாத்திமா திருமணப் படலத்தில்,

பொறைவளை கடற்பா ரெங்கும் போற்றதும் புதல்விஉள்ளத்
துறைகின்ற மகரக் கேட்டு வருகவென் றும்பர்போற்றும்
இறையவன் அருளிச் செய்தான் என்றுரைத் தனர்அம் மாற்றம்
முறைவழி விளக்கத் தூதர் மொழிந்தனர் பாவைக் கன்றே.

என்று வரும் 49 ஆம் பாடலைக் காட்டலாம்.

திருமணம் போன்ற விழாக் காலங்களிலும் மற்றும் வைபவங்களிலும் மேளம் போன்ற இசை, கூத்து முதலியவை இடம்பெறுவதை இஸ்லாம் விலக்கியிருக்கிறது. மாறாக அறபுப் பாடல்களை இசைப்பது இஸ்லாமியரின் மரபு அதற்கு ரைத்து ஓதுதல் என்று சொல்வர்,

பொருவி லாதகர் ஆடவர் அரிவையர் போற்ற
மரும வழிப்புய முகம்மதை அலிமை வாழ்த்திக்
கருத லிக்கரி வேறெனும் காளையா கூடித்
தெருவெ லாம்மணப் டைத்துகள் சொலிசொலித்திரிவார்.[2]

என்னும் பாட்டில் இதன் இஸ்லாமிய மரபு சுட்டிக்காட்டப் படுகிறது.

இப்படியாக முஸ்லிம்களின் வாழ்க்கையின் எல்லாத் துறைகளிலும் ஆடசி புரியும் தனிததன்மையோடு கூடிய இஸ்லாமியமரபுகளை பொருத்தமான இடங்களில் பொருத்தமான வழிகளில் தமது காவியத்திலே புகுத்திப் பாடியுள்ளார் உமறுப்புலவர்,


  1. 1. சீறா. தலைமுறைப் படலம் 9
  2. 2. சீறா பாத்திமா திருமணப் படலம் 109