பக்கம்:சிந்தைக்கினிய சீறா.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



காலம் தந்த கவிஞன்!

கலைமாமணி கவி கா. மு. ஷெரீப்

வில்லினும் வேகமுடையது சென்று தைப்பதில்! வாளினும் வலிமையுடையது வீரம் விளைப்பதில்! தேனினும் சுவையுடையது இனிமை சேர்ப்பதில் மழலையினும் சிறப்புடையது மகிழ்வளிப்பதில்! பிரிவினும் கொடியது துயர் தருவதில்! மழையினும் உயர்வுடையது பயனளிப்பதில்! பாலினும் அமுதினும் நலமுடையது உயிர்ச் செழிப்பிற்கு! மலரினும் மணமுடையது, மென்மையானது வளமான கவிதை!

இத்தன்மையில், ஏதாவதொன்றினைத் தாங்கி நிற்பதையும் நாம் கவிதை என்போம். அனைத்தையும் கொண்டு திகழ்வதை, மா கவிதை யென்போம்.

கவிதைகளை இவற்றுபவன் கவிஞன். மா. கவிதைகளைப் படைப்பவன் ம்கா கவிஞன்.

தமிழ் மொழியில் பல மகா கவிஞர்கள் உண்டு ‘சீறா’ தந்த உமறுவை, தமிழகம் பெற்ற உலக மகா கவிஞர்களின் தலைவர் என்போம். இப்படிச் சுட்டுவது தமிழுக்கு நாம் செய்கின்ற சிறப்பாக அமையும், ஆம், நவரசம் சொட்டப் பாப்புனையும் தன்மையில், உமறுக்கு நிகரானவர் எவருமிலர். இது உண்மை வெறும் புகழ்ச்சியன்று.

கம்பீரமாக-நிமிர்ந்து விழிப்புடன் நோக்கும் தன்மையில் -[GRAND OPENING] ஆரம்பிப்பது, அடுத்து என்ன? என்ற ஆவலைத் தூண்டுகிற தன்மையுடன் காட்சிகளை முடிப்பது (END) நல்ல நாடகத்திற்கான பாங்கு எனபர். இதே போன்று, காவியங்களுள் படலங்கள் (CHAPTERS) அமைவது சிறப்புடையதாகும். இந்தச் சிறப்பியல்புகளை, உமறு படைத்தளித்துள்ள ‘சீறா’ முழுவதிலும் காணலாம்.

இளங்கோ அடிகளும், சாத்தனாரும் வாழ்ந்த காலம், தமிழுக்குத் தமிழகத்தில் சிறப்பிருந்த காலம்,