பக்கம்:சிந்தைக்கினிய சீறா.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

42


வகையிலே, ஏற்று நினைவில் நிறுத்தி, நினைந்து நினைந்து மகிழ்ந்து, பாடிப் பாடி, பரவசம் அடைகின்ற தன்மையிலே தருகின்றார்.

தமிழிலே சரித்திரப் பாடல்களுக்குப் பஞ்சமில்லை என்பது போன்று, தோத் திரப் பாடல்கட்கும் பஞ்சமில்லை. ஆனால் உருவிலி என்று கடவுளைப் பாடுங் கவிஞர்கள் கூட. இடையிடையே மலையே என்றும், மணியே என்றும், கடலே என்றும், கனியே என்றும் உருவமுடையவைகளை உவமித் துக் காட்டியே பாடியுள்ளார். இதனால், உவமேயத்தைத் தவிர்த்துத் தள்ளிவிட்டு, உவமைக்கு உரியவற்றிற்கு உருவமிட்டு உருவவழிபாட்டிற்கு ஆக்கம் தேடிக் கொண்ட அறிவாளிகள் உள்ள நாடு இது என்பதனை, உமறுப் புலவர் ஊன்றிக் கவனித்து உணர்ந்து உள்ளத்தில் பதிய வைத்துக் கொண்டிருக்கிறார் எனவே, உருவமற்ற கடவுளைப் பாடும் போது உருவம் சமைத்துக் கொள்ளக்கூடிய சொற்களைத் தவிர்த்திருக்கிறார். "திருவினும் திருவாய்" என்ற சொல்லிற்கு எப்படி உருவம் நாட்ட முடியும்? இந்தப் பாடலில் உள்ள எல்லாச் சொற்களுமே இதைப் போன்றவைகளே ! ஒளி என்கின்ற சொல்லினை மட்டும் தான் காட்சிப் படுத்தமுடியும், இந்கச் சொல்லிற்கு இத்தகு அபாயம் இருக்கின்றது என்பதனை உமறுப்புலவர் உணர்நதிருந்தவராகவே திகழ்கின்றார். எனவே, "மதித்திடாப் பேரொளி,..” என்று தொடங்கி நாம் காண இயலாத கற்பனைச் சொல்லிட்டுச் சுட்டுகின்ற ஒளியும் கூட, பொருவினும் பொருவா வடிவினும் வடிவன் என்று கூறுவதன் மூலம், காட்சி படுத்திக் காட்ட முடியாதவன் இறைவன் என்பதை உறுதிப்படுத்தியுள்ளார். பாடுவதற்கும் பாட்டின் பொருளுணர்ந்து போற்றுவதற்கும் உரிய அரிய பாடல் சீறாப்புராணத்தின் துவக்கத்திலேயே வருகின்ற - உமறுப்புலவர் தருகின்ற இந்தப் பாடல்! இது போன்ற பாடல் தமிழ்க் காப்பியங்களில் இதற்கு முனபு உள்ளதாகத் தெரியவில்லை.

இந்தப் பாட்டின் மூலம், தமிழ்க் கவிஞர்கள் கற்றுக் கொள்கின்ற பாடம், உருவமற்றவன் கடவுள் என்று பாடி