பக்கம்:சிந்தைக்கினிய சீறா.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

61

 என்பது தீன் நிலை கண்ட படலம் காட்டும் வீட்டின்ப நெறி' இந்த இறுதிப்பொருள் குறி விரிவாக ஆராய இடமிருக்கிறது.

"அருளே பொருளாய் அன்பே சொல்வாய் ஆர்வமே பண்ணாய் அதுவே பயனாய்
பூவழகுடனே புதுமணம் போலக் தேனிசை தழைத்த கெய்வக் கவிகை
சிந்தாமணி யெனத் தித் திக்கின்ற சீர்பெரும் புராணம் சீறாப் புராணம்"

என்று சீறாப் புராணத்தைச் சிறப்பித்துச் சொல்கிறார் ஒரு புலவர். அருளே உமறுப்புலவர் கூறும் பொருள். அன்பே அவர் சொல்ல நினைக்கும் நெறி. அறிவே அவர் தம் காவியத்தின் பயன். இவற்றையெல்லாம் சொல்லும் முறையில் உமறுப் புலவர் கையாளும் உத்தி மற்ற புலவர்களிடமிருந்து அவரை வேறுபடுத்தி தனிச்சிறப்புக்குரிய ஒரு தமிழ்ப்புலவராக நிலைபெறச் செய்கின்றன. அவர் இரட்டைச் சிறப்புக்குரியவர். இஸ்லாம், தமிழ் ஆகிய இருபெரும் பண்பாடுகளையும் இணைத்து இறவாத காவியம் பாடிய பெருமை உமறுவுக்கே உரியது, இரண்டு பண்பாடுகளைக் கலந்து பாடினாலும் இரண்டுமே தத்துவம் தனித்தன்மையை விடாதபடி பாடியிருப்பது மற்றொரு சிறப்பு. உமறுவின் காவியத்தில் இல்லாத பொருள் இல்லை. தமிழ் மரபு இருக்கிறது. உண்மை இருக்கிறது. காவிய மரபு இருக்கிறது. இஸ்லாமிய மரபு இருக்கிறது. உலகியல் இருக்கிறது உண்மை இருக்கிறது. இவை அனனத்தையும் இ இறவாத் தமிழ்க் காவியம் படைத்த முதல் முஸ்லிம் தமிழ் காவியப் புலவர் உமறுதான். அதுவே அவருடைய தனித் திறன்.