பக்கம்:சிந்தைக்கினிய சீறா.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

81


பண்டைத் தமிழர் தமக்கென ஒரு வரலாறு காணாமலேயே சென்றுவிட்டனர். அடக்கமுடைமைக்கு ஒர் அதிகாரமே வகுத்துவிட்டார் வள்ளுவரும். இவ்வடக்கத்தின் காரணமாகவே 'உம்' எனும் முன்னே ஓராயிரம் கவிபாடுந் திறமை கொண்டிருந்த புலவர் பெருமக்கள் அவையடக்கமாகத் தங்களைக் 'சடலினை நக்கப் புகந்ததொரு பூனை போல’ என்று சொல்லிச் செல்லக் காண்கிறோம். உமறுப்புலவரும், செந்தமிழ்ப் புலவர் முன் சீறாப்புராணத்தை அவர் விளம்புவது, "திக்கனைத்தும் வென்ற செங்கோலரசன் முன் கூலி வேலை செய்தும் பிழைக்க முடியாத ஒருவன் சமமாக அமர்வது போலும்" என்றும், "பெரும்புயலின் எதிரே சிற்றெறும்பொன்று பெருமூச்சு விடுவது போலும்" என்றும், "இடி இடித்திடும் ஆரவாரத்தினுக்கு எதிர் ஓர் நொடி நொடிப்பது போலும்" என்றும் அவையடக்கம் [1] கூறுதல் தமிழ்ப் பண்பாட்டின் வெளிப்பாடேயாம்!

பாலை நிலத்தில் பைந்தமிழ் நாடு

நபிகள் நாதரின் வரலாற்றினைக் கூறுகின்ற உமறுப் புலவர் நாட்டுப் படலமாகப் பாடவேண்டியது அரபு நாட்டுப் படலமே. அவர் பாடியதும் அதைத்தான். ஆயினும் அங்கு நாம் முத்தமிழ் நாட்டையே முழுமையாகக் காண்கிறோம். மிகக் கொடிய வறண்ட பாலை நிலமான அரபு நாட்டில் எழில் கொஞ்சும் தமிழ்நாட்டு வளத்தைக் கண்டு மகிழ்கிறோம். இறைதூதர் தோன்றிய இடத்தைப் பாலையாகப் படைத்துக் காட்டக் கவிஞர்க்கு மனமில்லை போலும! உமறுவின் கவி வளத்தால், பாலையே படிவமாய் அமைந்த அரேபியாவில், தமிழகத்தின் நானில வளங்களும் நன்கு படிந்து விடுகின்றன! அவர் பாடுகிறார்: "அரபு நாட்டு மலைகளில் மிகுதியான மழை பொழிந்து நீர் பெருக்கெடுக்கிறது அம் மழையில் நனைந்தமையால் யானை, மான், புலி, அணில், உடும்பு, குரங்கு, தேவாங்கு, கரடி,



6

  1. 1. சீறா. அவையடக்கம் 1, 2, 3 பாடல்கள்