பக்கம்:சிந்தைக்கினிய சீறா.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

87


"வெய்யவன் அலர்த்த விகசிதம் பொருந்தி
விரிநரைக் கமலமென் மலரிற்
செய்யவள் இருப்பது என எழில் சிறந்து"[1]

இருந்ததாம் 'செந்தாமரையில் வீற்றிருக்கும் திருமகள்' என்ற தமிழ் வழக்கினை சீறாப்புராணத்தில் ஏற்றி விடுகிறார் உமறுப்புலவர்.

போர்க்களக் காட்சிகள்

உமறு விவரிக்கும் போர் நிகழ்ச்சிகளும் காட்சிகளும் அவை அரபு நாட்டில் நடந்தனவா அன்றித் தமிழ் நாட்டில் நடந்தனவா என்று எண்ணுமளவுக்கே அமைந்து கிடக்கின்றன. அபூஜஹில் என்பவன் தன் முப்பெரும் வீரர்களாகிய சைபத்து, ஒலிது, உத்பத்து ஆகிய மூவரும் மடிந்தார்கள் என்பதறிந்து கடுமையாகப் போரிடுகிறான். இதனைக் கவிஞர்,

"படர்ந்து கொன்றனர் சிலர்சிலர்; இழிந்துவெம்பரியை
நடந்து கொன்றனர் சிலர் சிலர்; நடையுமற் றொழிந்து
கடந்திருந்து கொன்றனர் சிலர் சிலர் மனங்களன்று
கிடந்து கொன்றனர் சிலர்சிலர்; வீரர்கள் கெழுமி"[2]

என்று குறிப்பிடுகிறார். இக்காட்சி கலிங்கத்துப் பரணியின்,

"எறிகடலொடு கடல் கிடைத்தபோல்
இருபடைகளும் எதிர் கிடைக்கவே,
மறி திரையொடு திரை மலைத்த போல்
வரு பரியொடு பரி மலைக்கவே" [3]

என்னும் காட்சியினை நினைப்பூட்டுகிறதல்லவா!

மேலும் வீரன் ஒருவன் தன் மாற்றாரை அம்புகளால் தாக்கிக் கொண்டிருக்கிறான். அம்பறாத் தாணியில் அம்புகள்


  1. 1. சீறா. தசைக் கட்டியைப் பெண்ணுருவமைத்த படலம் 25
  2. 2. சீறா பதுறுப் படலம் 201
  3. 3. கலிங். பரணி