பக்கம்:சிந்தைக்கினிய சீறா.pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

88


தீர்ந்து விட்டன; மற்றாரோ எதிர்க்கின்றனர்; என்ன செய்வது? வீரன் அஞ்சவில்லை. மாற்றார் விட்ட அம்புகள் தன் மார்பகத்தில் நூற்றுக்கணக்கில் தைத்திருப்பதைப் பிடுங்கி வில்லில் தொடுத்துப் பகைவரை மாய்க்கிறான். இதனை உமறுப்புலவர்.

"அடுத்துப் பிற்புறத் தூணியில் கிடந்த அம்பனைததும்
தொடுத்து மள்ளரைத் துணித்து அறத் தொடுசரம்இலவான்
மடுத்து மார்பகங் கிடந்தஅம் பனைத்தையும் வாங்கி
விடுத்து நின்றனன் சிலைகுழைந் திடவொரு வீரன்"[1]

என்ற பாடலால் விளக்குகிறார். இஃது அரபு நாட்டுப் போர்க்களமெனினும்,

"கைவேல் களிற்றொடு போக்கி வருபவன்
மெய்வேல் பறியா நகும்"[2]

என்னும் வள்ளுவரின் பைந்தமிழ் நாட்டுப் போர்க்களமாக அல்லவா காட்சி தருகிறது!

மற்றொரு வீரன் தன் இரு கைகளையும் கால்களையும் இழந்தும் பூமியின் மேல் கிடந்து, என் உடலால் உங்களை அழிப்பேன்; அதனால் என்னை ஒதுக்காமல் மீண்டும் போருக்கு வருக !"-என்று பகைவர்களை அழைக்கின்றான். இதனை உமறுப்புலவர்,

"ஆவி யோசினமோ பெரிதென அறிகிலன் போர்த்
தாவிப் போக்கினன் கரத்தொடும் இருதுணைத்தாளும்
பூவின்மேற் கிடந்து ஆர்ப்பொடும் வயவரைப்கழ்ந்து
கூவி ஒய்ந்திலன் 'போர்வருகென' ஒரு குரிசில்"[3]


  1. 1. சீறா. பதுறுப் படலம் 147
  2. 2. குறள் 774
  3. 3. சீறா பதுறுப் படலம் 154