பக்கம்:சிந்தைக்கினிய சீறா.pdf/96

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

90


மேலும் வேதத்தை ஓதிப் பார்ப்பதற்காக 'உமறு' என்னும் வீரர் தெளிந்த நீரால் பரிசுத்தம் செய்து கொள்கிறார். அது எத்தன்மையான நீர் தெரியுமா? கவிஞர் அதனை,

"மன்னவன் அபுல் காசீம் தன்
மனத்தெளி வதனின் மிக்காய்-தெளிந்த நீர்"[1]

என்பதாலும் செய்ந்நன்றி மறவாச் செந்தமிழ்ப் பண்பு போற்றப்படுவதை உணரலாம்.

ஹலரத் அபுத்தாலிபை ஊரைவிட்டே துரத்தி விடுவோம் என்று குறைஷியர்கள் முனைந்தபோது அபுத் தாலிபுவின் தம்பியாகிய 'அபூலஹப்',

"எனக்கு முன்னவன் தலை இடர் விளைத்திடல் எனது
மனக்கு றைப்படல் இவைதவிர்த் திடீர்...-"[2]

என உறுமிச் சீறியெழுந்ததைப் பார்க்கிறோம். 'அபூலஹப்' பிற்கும் அவர் அண்ணனுக்கும் எவ்வளவோ கொள்கை வேறுபாடுகளிருந்தாலும் இந்த நேரத்தில் அவர் அண்ணனை விட்டுக் கொடுக்கவில்லை. இப்பண்பு, கொள்கையில் மாறுபட்டாலும், "நெடிது நாள் வளர்த்துப் பின்னைப் போர்க் கோலம் பூணவிட்டா" ராகிய இராவணனுக்காகவும் துரியோதனுக்காகவும் கும்பகர்ணனும்-கர்ணனும் காட்டிய செய்ந்நன்றி மறவாக் கடப்பாட்டை நினைவூட்டுகிறது அல்லவா?

இது போலவே விருந்தோம்பற் பண்பாடும் சிறப்பிக்கப் பட்டிருக்கிறது. விருந்துண்ண வந்தவர்களையெல்லகம் முகமலர வரவேற்றார் இசுறா. பிறகு, "வந்திருந்த எல்லோரையும் இங்கு அழைத்து வந்து விட்டீர்களா" என்று கேட்டார் அவர். அதற்கு 'அபூஜஹ்லு' என்பான். 'அஹமது என்ற ஒருவனல்லால் எடுக்க அருந்தவத்தின்


  1. 1. சீறா. உமறுகத்தாபு ஈமான் கொண்ட படலம் 72
  2. 2, சீறா. ஈமான் கொண்டவர்கள் ஹபஷா ராச்சியத்திற்குப் போந்த
    படலம் 33