பக்கம்:சின்னஞ்சிறு வயதில்.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

9

சுருட்டை மயிர்ப் பெண்
    காலே நேரம். சூரிய ஒளி எங்கும் பரவியிருந்தது. அப்போது சுருட்டை மயிர்ப் பெண் ஒருத்தி சாலை வழியாக ஒடிக்கொண்டிருந்தாள். சிறிது துரத்தில் அவளுடைய தோழிகள் விளையாடிக் கொண்டிருந்தார்கள். அவர்களுடன் சேர்ந்து விளையாடவே அவள் ஒடினாள்.
    அப்போது, குறி சொல்லும் கிழவி ஒருத்தி எதிரே வந்தாள். அவள் அந்தப் பெண்ணிடம், "பாப்பா, எங்கே உன் கையைக் காட்டு; பார்க்கலாம்” என்றாள்.
    உடனே அந்தப் பெண் நின்றாள். “என் கையைத் தானே பார்க்கவேண்டும்? இதோ என் கை” என்று கூறித் தன்னுடைய கையை விரித்துக் காட்டினாள்.
    இதைச் சிறிது தூரத்தில் விளையாடிக் கொண்டிருந்த பெண்களில் ஒருத்தி பார்த்துவிட்டாள். உடனே அவள் மற்றவர்களிடம், ஐயோ, நமது மர்ஜாவைப் பாருங்கள். அந்தக் குறிகாரியிடம் கையை நீட்டிக்கொண்டு நிற்கிறாள்!" என்றாள். உடனே எல்லாரும் அந்தச் சுருட்டை மயிர்ப் பெண் நிற்கும் பக்கம் பார்த்தார்கள். ‘அடியே மர்ஜா, அந்தக் கிழடு ஏதாவது உளறும். அதைக் கேட்டுக்கொண்டு நிற்காதே! ஓடிவா, சீக்கரம்' என்று கத்தினார்கள்.
 
    சுருட்டை மயிர்ப் பெண் அவர்களது பேச்சைக் கேட்கவில்லை. கையைக் காட்டிக்கொண்டே நின்றாள். கிழவி அவளது கை ரேகைகளைக் கூர்ந்து பார்த்து விட்டு, 'எவ்வளவு அருமையான ரேகைகள்! நீ பெரியவளானதும் உனக்குப் பேரும் புகழும் பெருகி வரப் போகின்றன. நிச்சயமாகச் சொல்கிறேன்' என்றாள்.

இப்படி அவள் சொல்லிக் கொண்டிருக்கும்போதே எல்லாரும் அவள் அருகில் வந்துவிட்டார்கள். தோழிகள் வந்து சும்மா நிற்கவில்லை. சுருட்டை மயிர்ப் பெண்ணைக் கேலி செய்ய ஆரம்பித்தார்கள்

21