பக்கம்:சின்னஞ்சிறு வயதில்.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

18

யுத்த விளையாட்டு
    அது ஒர் இராணுவப் பள்ளிக் கூடம். அந்தப் பள்ளிக் இடத்தில் பல மாணவர்கள் பயிற்சி பெற்று வந்தார்கள். பயிற்சி பெறும் நேரம் தவிர மற்ற நேரங்களில் ஓடி ஆடி விளையாட வேண்டுமென்பது அவர்களது ஆசை. ஆனால், பள்ளிக்கூடத்தைச் சுற்றி எங்கு பார்த்தாலும் ஒரே பணியாயிருக்கும். பாறை பாறையாய்ப் பணிக்கட்டிகள் உறைந்திருக்கும். ஆகையால், அவர்கள் விளையாட முடியவில்லையே! என்று ஏங்குவார்கள்.
    அவர்களது ஏக்கத்தை அறிந்தான் புதிதாக அங்கு வந்து சேர்ந்த ஒரு மாணவன். 'உடனே, இதற்கு என்ன செய்யலாம்?' என்று யோசித்தான். 

சிறிது நேர யோசனைக்குப் பின் ஒரு முடிவுக்கு வந்தான். அந்த முடிவுப்படி மற்ற மாணவர்களே அழைத்துக்கொண்டு பனிப்பாறைகள் நிறைந்திருக்கும் ஓர் இடத்திற்குச் சென்றான். அவர்களுடன் சேர்ந்து பனிக்கட்டிகளால் அங்கேயே ஓர் அரண் ஏற்படுத்தினன். பிறகு என்ன செய்தான்?

    நண்பர்களில் பாதிப் பேரை அரணுக்கு அந்தப் பக்கத்திலும் பாதிப்பேரை இந்தப் பக்கத்திலும் நிற்க வைத்தான், பிறகு, இந்தப் பக்கத்தில் நிற்போரைப் பார்த்து, 'தோழர்களே, நீங்கள்தான் எ தி ரி க ள் என்று நினைத்துக் கொள்ளுங்கள். இப்போது நீங்கள் என்ன செய்ய வேண்டும், தெரியுமா? இந்த அரணைத் தாக்க வேண்டும்' என்றான்.

அதே சமயம், அந்தப் பக்கத்தில் நிற்பவர்களைப் பார்த்து, நீங்கள் என்ன செய்ய வேண்டும் தெரியுமா? எதிரிகள் அரணைத் தாக்காதபடி தடுத்துக் காக்க வேண்டும். அதுமட்டுமா? அவர்களைப் புறமுதுகு காட்டி ஒடும்படி .செய்யவும் வேண்டும் சரிதானா ..ம்.. நடக்கட்டும் யுத்தம்' என்று முழங்கினான்.

39