பக்கம்:சின்னஞ்சிறு வயதில்.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அவ்வளவுதான். இரு சாராரும் யுத்தத்தில் இறங்கி விட்டார்கள். வெகு மும்முரமாக யுத்தம் நடந்தது.

    அந்தப் போலி யுத்தத்தைப் பார்க்க சுற்றுப் புறத்திலுள்ள மக்களெல்லாரும் வந்து கூடிவிட்டார்கள். அவர்கள், யுத்தம் செய்யும் முறையைத் திறமையாகக் கற்றுக்கொடுத்த அந்த மாணவனைப் பாராட்டனார்கள்.
    'இவன் இவ்வளவு சிறியவனாக இருக்கிறான்! இந்த வயதிலே போர் நடத்தும் முறையை மிகவும் நன்றாகத் தெரிந்து கொண்டிருக்கிறானே!' என்று கூறி விய்ந்தார்கள்.

அதே மாணவன் ஒரு காலத்தில் மிகமிகப் பெரிய வீரணாக விளங்குவான் என்றே, ஐரோப்பாக் கண்டத்தையே ஆட்டி வைப்பான் என்றோ அப்போது யாரும் நினைத்திருக்க மாட்டார்கள். ஆம், நெப்போலியன் என்ற .பெயரைக் கேட்டாலே பெரிய அரசர்கள்கூட நடுநடுங்குவார்களே!

40