பக்கம்:சின்னஞ்சிறு வயதில்.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

19

அஞ்சா கெஞ்சன்
   அவனோடு கூடப்பிறந்தவர்கள் பதினோரு பேர். அவன்

ஆறுவது பிள்ளே. அவனுடைய தந்தை ஒரு மத குருவாக இருந்தார்.அவருடைய வருமானம் மிகக் குறைவு. அதனால் குழந்தைகளே நன்றாத வளர்க்க அவரால் முடியவில்லை. எல்லாரும் எலும்பும் தோலுமாகவே இருந்தார்கள். அந்த ஆறுவது பிள்ளையும் அப்படித்தான் இருந்தான். உடம்பு இறுதியாக இல்லாத போனாலும், அவனுடைய உள்ளம் உறுதியாகவே இருந்தது. 'பயம்’ என்றால் என்ன என்றே அவனுக்குத் தெரியாது: எந்தக் காரியத்தையும் துணிவோடு செய்வான்.

    ஒருநாள் அவனும் அவனுடைய அண்ணனும் பள்ளிக் கூடத்துக்குப் புறப்பட்டார்கள். பள்ளிக்கூடம் அருகிலே இல்லை. வெகு துரத்தில் இருந்தது. அதற்குப் போகும் பாதையும்மிக மோசமாக இருந்தது. அந்தக் காலத்தில்அதாவது பதினெட்டாம் நூற்றாண்டில் நல்ல பாதையைக் காண்பதே அபூர்வம். அதிலும், அது மிகவும் கடுமையான

பனிக்காலம். வழி நெடுக பனி பெய்து கொண்டிருந்தது.

    வீட்டை விட்டுக் கிளம்பும்போதே அவர்களுடைய அப்பா, 'பனி மிகவும் அதிகமாகப் பெய்கிறது. ஆகையால் வழியில் ஆபத்து ஏற்படும்போல் தோன்றினால், உடனே திரும்பி வந்துவிடுங்கள். ஆபத்தில் சிக்கிக்கொள்ளாதீர்கள்! என்று எச்சரித்து அனுப்பினர். 
    அண்ணனும் தம்பியும் பள்ளியை நோக்கிப் பணிப் பாதையில் நடந்து சென்றார்கள். வழியிலே ஓரிடத்தில் பாதை மிகவும் குறுகலாக இருந்தது. அத்துடன் சதுப்பு நிலமாகவும் இருந்தது. இங்கே காலே வைத்தால் நிச்சயம் உள்ளே அழுத்தி விடுவோம்!' என்று நினைத்து எவருமே பயப்படுவார்கள். அந்த அண்ணனும் அப்படி நினைத்துத் தான் பயந்தான். அங்கேயே நின்று விட்டான். ஆனால் தம்பியோ சிறிதும் அஞ்சவில்லை. மேலே செல்லக் காலே எடுத்து வைத்தான்.

அப்போது அண்ணன் 'தம்பி,வழியிலே ஆபத்து ஏற்படும் போல் தோன்றினால், உடனே திரும்பி வந்துவிடுங்கள் என்று

41