பக்கம்:சின்னஞ்சிறு வயதில்.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அப்பா சொன்னுரல்லவா? வா, திரும்பி விடுவோம், இதில் காலை வைத்தால் ஆபத்துத்தான்!' என்ருன். 'அண்ணு, ஆபத்து ஏற்படும்போல் தோன்றினால்தானே அப்பா திரும்பிவரச் சொன்னுர்? எனக்கு அப்படித் தோன்ற வில்லை. நீ வேண்டுமாளுல் திரும்பிப் போ' என்று கூறி விட்டுத் தைரியமாகத் தம்பி முன்னுேக்கிச் சென்ருன். ஆபத்துக்களை யெல்லாம் சா ம ர்த் தி ய மாக க் கடந்து பள்ளிக்குப் பத்திரமாகப் போய்ச் சேர்ந்துவிட்டான். அவனுடைய அஞ்சா நெஞ்சத்தைக் கண்டு அவனுடைய அண்ணன் ஆச்சரியப்பட்டான். அப்பாவும் ஆச்சரியப் பட்டார். ஒரு காலத்தில், இந்த உலகமே ஆச்சரியப் பட்டது! அது எப்போது? மாபெரும் வீரன் நெப்போலியனையே அவன் தோற் கடித்த சமயத்தில்தான்! கெல்சன் என்ற பெயரைச் சொன்னலே நெஞ்சை நிமிர்த்தி நிற்பார்கள் ஆங்கிலேயர்கள். இங்கிலாந்தில் எத்தனையோ வீரர்கள் பிறந்திருக்கிருர்கள். ஆனாலும், வீரருக்கெல்லாம் வீரர் என்று போற்றப்படுபவர் இந்த நெல்சன் ஒருவர்தான்!