பக்கம்:சின்னஞ்சிறு வயதில்.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3. 23 பன்றியின் விலை சீன தேசத்தில் ஒரு குடும்பம் இருந்தது. அந்தக் குடும் பத்தின் தலைவர் ஒரு விவசாயி. அவர் ஒரு காலத்தில் ஏழையாக இருந்தார். பட்டாளத்தில் சேர்ந்து பல ஆண்டுகள் வேலைசெய்த பிறகு, கையில் கொஞ்சம் பணம் சேர்ந்தது. அதனுல் கொஞ்சம் வசதியாக வாழமுடிந்தது. அந்த விவசாயிக்கு ஒரு மகன் இருந்தான். அவன் தினமும் பள்ளிக்குச் சென்று படித்து வருவான். படிக்கும் நேரத்தைத் தவிர மற்ற நேரங்களிலெல்லாம் அவன் வயலு க்குச் சென்று வேலை பார்ப்பான். மிகவும் உற்சாகமாகவும், சுறுசுறுப்போடும் அவன் வயல் வேலைகளைச் செய்வான். ஒருநாள், அவன் அப்பா, ஓர் ஏழைக் குடியானவன் விட்டுக்குச் சென்றிருந்தார். டயானவனிடம் ஒரு பன்றி இருந்தது. அதை வாங்க வேண்டுமென்று நினைத் தார். உடனே விலை .ேசிஞர். விலே முடிவானதும், அவர் குடியானவனிடம் பணத்தைக் கொடுத்தார். ஆணுல், அப்போதே பன்றியைக் கொண்டு செல்லவில்லை. பன்றி இங்கே இருக்கட்டும். நான் ஆள் அனுப்புகிறேன். அவனிடம் பன்றியைக் கொடுத்தனுப்பு' என்று கூறி விட்டுச் சென்ருர், அன்றைக்கோ அல்லது மறுநாளோ அவர் ஆள் அனுப்ப வில்லே. பதினைந்து நாட்கள் சென்ற பிறகே தம்முடைய மகனே அந்தக் குடியானவன் வீட்டுக்கு அனுப்பி வைத்தார். அந்தப் பையன் குடியானவனிடம் சென்று பன்றியைத் தரும்படி கேட்டான். அதற்கு அந்தக் குடியானவன், தம்பி, இந்தப் பன்றியை உன் அப்பா உடனே கொண்டு போகாமல், பதினைந்து நாட்கள் என்னிடமே விட்டுச் சென் றதால் இந்தப் பதினைந்து நாட்களும் நான் இதற்குத் தீனி போட்டு வளர்த்திருக்கிறேன். அத்துடன் பன்றி விலேயும் அன்று இருந்ததைவிட இன்று அதிகமாகிவிட்டது. ஆகை 59