பக்கம்:சின்னஞ்சிறு வயதில்.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

32 எட்டுக் கேள்விகள் பள்ளியில் பரீட்சை நடந்து கொண்டிருந்தது. கேள்வித் தாளில் மொத்தம் எட்டுக் கேள்விகள் இருந்தன. அவற்றில் நான்கு கேள்விகளுக்கு மட்டுமே விடை எழுதினால் போதும் என்று ஆரம்பத்தில் கூறப்பட்டிருந்தது. ஆலுைம், அந்த எட்டுக் கேள்விகளுமே கடினமான கேள்விகள், அதஞல், கேள்வித் தாளேப் பார்த்ததும் அங்கிருந்த மாணவர்களுக்கு ஒன்றுமே புரி யவில்லை. அவர்கள் எதிர்பார்த்த கேள்வி களில் ஒன்றுகூட வரவில்லை. கேள்வித் தாளைப் பார்த்துப் பார்த்து அவர்கள் திகைத்துக் கொண்டிருந்தார்கள். அவர்களில் மிகவும் கெட்டிக்கார மாணவன் ஒருவன் இருந்தான். அவனும் கேள்வித்தாளைப் பார்த்து விழித்துக் கொண்டுதான் இருந்தான். கேள்விகள் இவ்வளவு கடின மாக இருக்கின்றனவே! எப்படிப் பதில் எழுதுவது?’ என்று எண்ணி அவன் விழிக்கவில்லை; இந்த எட்டுக் கேள்விகளில் நான்கு கேள்விகளுக்கு மட்டும்தானே விடை கேட்டிருக்கி முர்கள்? எந்த நான்கிற்கு விடை எழுதுவது?’ என்று தெரியாமல்தான் அவன் விழித்தான்! சிறிது நேரம் இப்படி யோசனை செய்தான். கடைசியில் ஒரு முடிவுக்கு வந்தான். விறுவிறு' என்று விடை எழுத ஆரம்பித்தான். அந்த எட்டுக் கேள்விகளுக்குமே விடை எழுதிவிட்டான். விடைகளின் அடியிலே ஒரு குறிப்பையும் எழுதிவைத்தான்.

ஐயா, பரீட்சை அதிகாரி அவர்களே, எட்டுக் கேள்வி களுக்குமே விடை எழுதிவிட்டேன். ஏதேனும் நான்கு விடைகளுக்கு மார்க் போட்டால் போதும்' என்றுதான் எழுதியிருந்தான்.

பரீட்சை அதிகாரி அவனது விடைகளைப் படித்துப் பார்த்தார். குறிப்பையும் படித்துப் பார்த்தார். அவருக்கு 67