பக்கம்:சின்னஞ்சிறு வயதில்.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

36 யானைச் சவாரி அந்தப் பெண்ணுக்கு வயது மூன்றுகூட ஆகவில்லே. அதற்குள் அவளுடைய அம்மா இறந்துவிட்டாள். அப்ப தான் அவளே வளர்த்துவத்தார். அந்த அப்பாவுக்கு அரண்மனையிலே வேலை. அவர் அரண்மனைக்குப் போகும் போதெல்லாம் மகளேயும் கூடவே அழைத்துக்கொண்டு 芷 f - -- போவார். அவள் அரசகுமாரனுடன் சேர்ந்த விளையாடு வாள். ஒரு நாள், அரசகுமாரன் ஒரு யானைமேல் ஏறிச் சவாரி செய்து கொண்டிருந்தான். அதைப் பார்த்தாள் அந்தப் பெண். உடனே அவளும் யானைச்சவாரி செய்யவேண்டும் என்று ஆசைப்பட்டாள். அப்பாவிடம், அப்பா, அப்பா, என்னையும் யானைமேல் ஏற்றிவிடப்பா' என்று கெஞ்சினுள். ஐயோ! வேண்டாம். யானைமேல் ஏறினுல், யானே என்ன தெரியுமா செய்யும்? தும்பிக்கையால் உன்னே அப்படியே வளைத்துப் பிடித்துத் தூக்கி எறிந்துவிடும்' என்ருர் அப்பா. ராஜகுமாரனை மட்டும் அது துரக்கி எறியாதோ?’’ என்று கேட்டாள் அவள். ராஜகுமாரனுக்கும் உனக்கும் வித்தியாசமில்லையா? அவன் ஆண்பிள்ளை. நீ பெண்தானே! உன்னுல் யானையை அடக்க முடியுமா?’ ’ - ஏன் முடியாது? அங்குசத்தைக் கழுத்தில் கை ومم அழுத்தினுல் யானை அடங்கிவிடுகிறது. அவ்வளவுதானே ! இதைக் கேட்டதும், இவ்வளவு கெட்டிக்காசியாகவும் தைரியசாலியாகவும் நம்முடைய மகள் இருக்கிழளே! என்று நினைத்து அப்பா ஆனந்தப்பட்டார். அதுமுதல் அவள் விருப்பம்போல் நடக்க அனுமதித்தார். அவள் ராஜ

75