பக்கம்:சின்னஞ் சிறு பெண் (மொழிபெயர்ப்பு).pdf/121

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

110 ஆர்லோவ் தம்பதிகள் பணி புரிவதை அவன் இதற்கு முன்னர் ஒருபோதும் கண்டதில்லை. டாக்டர்கள், மாணவர்கள் ஆகியோரின் சோர்வு படிந்த முகங்களைப் பார்க்கையில் இங்குள்ள மனிதர்கள் தான் உண்மையாகவே பாடுபட்டு உரிய பணத்தைப் பெறுகிறார்கள் என்று அவன் கருதினான். அன்று, நாள் முடிவில், அவனுடைய வேலை தீர்ந்ததும் மிகவும் தளர்வுற்றிருந்த கிரிகரி வாச ஸ்தலத்தின் முற்றத்துக்குப் போய், அங்கேயுள்ள மருந்துக் கடை ஜன்னலின் கீழே படுத்து விட்டான். அவனுக்கு மண்டையிடி ஏற்பட்டிருந்தது: வயிற்றில் கடுமையான வலி அரித்தது. அவனுடைய பாதங்களும் குத்திக் குடைந்தன. எண்ணம், ஆசை எதுவும் இல்லாமல் அவன் புல் தரை மீது நீட்டி நிமிர்ந்து விட்டான். அஸ்தமன சூரியனால் வளமான வர்ண மெருகு பெற்றிருந்த பஞ்சு மேகங்கள் சிலவற்றைப் பார்த்தவாறே கிடந்தான்: சீக்கிரமே அவன் அயர்ந்த உறக்கத்தில் ஆழ்ந்து விட்டான். அவன் கனவு கண்டான். டாக்டர் ஒருவர், மிகப் பெரிய அறை ஒன்றில், அவனுக்கும் அவன் மனைவிக்கும் விருந்து அளிக்கிறார், அந்த அறையின் சுவர்கள் அருகே வரிசையாக நாற்காலிகள் இருந்தன. வாசஸ்தலத்தின் நோயாளிகள் எல்லோரும் அந்நாற்காலிகளில் உட்காரந்திருக்கிறார்கள். டாக்டரும் மேட்ரோனாவும் அறையின் நடுவே, அமைவான ரஷ்ய நடனம் ஒன்றை ஆடிக் கொண்டிருக்கிறார்கள். அவன் வாத்தியம் வாசிக்கிறான். டாக்டரின் கால்கள் சரியாக வளையவில்லை. அறையைச் சுற்றிச் சுற்றி அவர் மேட்ரோனாவைத் தொடர்ந்து ஆடம்பரமாக ஆசாரத்தோடு ஆடிச் செல்லும் பொழுது, எல்லோர் பார்வைக்கும் அந்த டாக்டர் சதுப்பு நிலத்தில் உள்ள கொக்கு மாதிரியே காட்சி அளிக்கிறார்.அதைக் கண்டு