பக்கம்:சின்னஞ் சிறு பெண் (மொழிபெயர்ப்பு).pdf/123

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1.1% ஆர்லோவ் தம்பதிகள் "அது இன்னும் மோசம் தான். உன்னே நீயே கண்ருகக் கவனித்துக் கொள்ள வேணும். ஊரைச் சுற்றி லும் ஆபத்தாக இருக்கிறது. நீ எங்களுக்கு அவசியம் தேவை, அப்பனே!' கிரிகரி மெளனமாக அந்த டாக்டரைத் தொடர்ந்து. வராந்த வழியே சென்ருன். அதே மாதிரி பேசாமலே, முதலில் ஒரு கிளாசிலிருந்து ஏதோ ஒரு மருந்தை விழுங் கினன். பிறகு வேருெரு கிளாசிலிருந்ததைக் குடித்தான். முகத்தைச் சுளித்து விட்டுத் துப்பினன். "சரி இப்ப போய் கொஞ்ச நேரம் துரங்கு' என்று சொல்வி விட்டு, டாக்டர் மெலிந்து நீண்டு காணப்பட்ட கால்களே வீசி வீசி நடந்து போளுர், அவர் போவதையே கவனித்தான் கிரிகரி. பிறகு சட் டென்று, முகத்தில் பெரும் சிரிப்பு படர, அவன் அவர் பின்னல் ஓடினன். நன்றி, டாக்டர்' என்ருன். "எதற்காக?' என்று அவர் கேட்டார். "உங்களுடைய சிரமத்திற்காகத்தான். நான் என்னுல் இயன்ற மட்டும் உங்களுக்காகப் பாடுபடுவேன். நீங்கள் கிச்சயமாக கம்பலாம். நீங்கள் எனக்காக இவ்வளவு சிரமம் எடுத்துக் கொண்டதையும் ... இன்னும் ... வந்து ... நான் தங்களுக்குத் தேவை என்றெல்லாம் சொன்னதையும் நான் மிகவும் போற்றுகிறேன். ரொம்ப ரொம்ப வந்தனம்.' புதியதோர் உவகையில் ஒளிபெற்ற முகத்தோடு கின்ற அந்த உதவியாளனே டாக்டர் ஆச்சரியத்தோடு நோக்கினர். அவர் முகமும் புன்முறுவல் பெற்றுத் திகழ்ந்தது.