பக்கம்:சின்னஞ் சிறு பெண் (மொழிபெயர்ப்பு).pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

66 4 ஆர்லோவ் தம்பதிகள் அன்று பூராவும் அவன் மனச் சாட்சியின் குத்துதல் களிளுல் அவதியுறுவான். அடிக்கடி அவ்வேதனே தாங்க முடியாத அளவுக்கு வலியதாகி விடும். அதனுல் அவன் தனது வேலையை ஒதுக்கித் தள்ளி விட்டு, பயங்கரமான வசைமொழிகளைக் கக்கிய வாறே அந்த அறையில் அங்கு மிங்குமாகப் பாய்வான். அல்லது படுக்கையில் விழுந்து புரளுவான். அத்தகைய நிலைமையை அவன் சமாளித்து முடிக்கிற வரை மேட்ரோன பொறுத்திருப்பாள்; பிறகு அவர்கள் இராசி உடன்படிக்கையில் ஈடுபடுவார்கள். அவர்களுக்குக் கலியாணமாகியிருந்த புதுசில், சமா தானமாகப் போக உதவுகிற இத்தகைய சக்தர்ப்பங்கள் இனிமையும் துண்மையும் நிறைந்தது சுக அனுபவ மிகுதி யோடுவிளங்கின. ஆணுல், நாளடைவில் அவை சர்வசாதா ரணம் ஆகிவிட்டன. பிறகு, மறு சனிக்கிழமை வரை உள்ள ஐந்து நாள் இடைக்காலத்தில் ஒருவருக்கு ஒருவர் பேசாமல் பொழுது போக்குவது மிகவும் அசெளகரியமாக இருந்ததனுல் தான் அவ்விருவரும் சமாதானம் செய்து கொண்டார்கள். - "நீ குடித்துக் குடித்து சாகத்தான் போகிராய்'என்று மேட்ரோனு பெருமூச்சோடு சொன்னுள்." "அப்படித் தான் ஆகும்” என்று கிரிகரி உறுதி கூறுவான். தான் சாகும்படியாகக் குடிப்பது அல்லது குடிக்காமல் இருப்பது எல்லாம் ஒன்றுதான்; எதிலும் தான் சிறிதளவு பேதம் கூடக் காணவில்லை என்று உணர்ந்துவிட்டவன் மாதிரி அவன் ஒரு மூலையை நோக்கிக் காறித்துப்புவான்ன்ன "நீ எனை வி ஓடிப் போவாய்.” தான் காணும் எதிர்காலச் சித்திரத்துக்கு அதிகப்படியான அம்சமாக இதையும் அவன் சேர்த்து விடுவான். அப்படிக் கூறும் பொழுதே அவன் கூரிய பார்வையினல் அவனே ஆராய்வான்.