பக்கம்:சிரிக்கும் பூக்கள்.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொல்காப்பிய சூத்திரத்திலிருந்து, புதிதாக எழுதத் தொடங்கியுள்ளவர்களில், பெரும்பாலானவர்கள் கவிதைகள் வரை இவர் நன்கறிவார். அறிந்திருப்ப தோடு அவற்றில் நல்லனவற்றை மேடைகளிலும் எடுத்துக்கூறி அவர்களுக்கு ஏற்றம் தருபவர். பல விழாக்களில் என்னைப் பாராட்டிப் பேசிய தோடு, பலவகையிலும் எனக்கு ஊக்கமூட்டி வரும் இவரது அணிந்துரை இந்நூலுக்குச் சிறப்பளிக்கிறது. அணிந்துரை என்று சொல்வதைவிட இதை ஒர் ஆராய்ச்சி உரை என்றே கூறவேண்டும். மேனாட்டில் குழந்தை இலக்கியம் வளர்ந்த வரலாற்றையும், தமிழில் குழந்தை இலக்கியம் வளர்ந்து வரும் நிலை யையும் மிகத் தெளிவாக எடுத்துக் கூறியிருக்கிறார். அணிந்துரை வழங்கியுள்ள இரு பேரறிஞர் களுக்கும் நான் பெரிதும் கடமைப்பட்டுள்ளேன். இத்தொகுப்பிலுள்ள பாடல்கள் அனைத்தையும் படித்துப் பார்த்து, அவை திருத்தமுற அமைவதற்கு அரிய பல யோசனைகளைக் கூறியவர்களில், நல்லாசிரியர் விருது பெற்றவரும், சிறந்த கவிஞரும், புலவரும், வானொலி சிறுவர் சங்கப் பேரவையின் தலைவருமாகிய திரு. தணிகை உலகநாதன் அவர்கள் குறிப்பிடத்தக்கவர். 1954க்குப் பிறகு நான் எழுதிய கவிதை நூல்கள் அனைத்தும் அவர் பார்வையிட்ட பின்னரே வெளிவந்துள்ளன. சிறந்த கவிஞரும், வானொலியில் பல்லாண்டுகள் திறம்படப் பணியாற்றியவரும், தற்போது அண்ணா மலைப் பல்கலைக் கழகத்தின் ஆராய்ச்சிப் பேராசிரி யராக விளங்குபவருமாகிய திரு. மீ.ப.சோமு அவர்கள,