பக்கம்:சிரிக்க சிந்திக்க சிறுவர் கதைகள்.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

புலவர். த கோவேந்தன், டிலிட்.,

25


மாண்புமிகு அய்யா” என்று அழையுங்கள் என்றான். ‘ஏன்?’ என்று கேட்டபோது அவன் சொன்னான் “நம் நாட்டில் அரசுத் துறை பொறுப்பு அதிகாரிகள் அவ்வாறு தான் அழைக்கப்படுகிறார்கள்” என்று.

27. ஒரு நீர் முந்திரி மரம்

மலைவாசி ஒருவன் ஏரிகள் நிறைந்த ஏரி வட்டாரத்திற்கு வந்தான். நடந்து வந்த களைப்புத் தீர ஏரிக்கரையில் நின்ற ஒரு மரத்து நிழலின் ஓய்வுக்காக அமர்ந்தான். பக்கத்தில் ஒரு நீர்முந்திரி கிடப்பதைக் கண்டு, அதனையெடுத்து உண்டான். அது மிகவும் அரிய சுவைமிகுந்திருப்பதை உணர்ந்தான். பின்னர் எழுந்து நின்று அந்த மரத்தின் தண்டினையும் கிளைகளையும் உலுக்கினான். ஆனால் ஒன்றும் விழவில்லை. “இத்தனைப் பெரிய மரத்தில் ஒரே ஒரு முந்திரிப் பருப்புதானா?” என்று தனக்குள்ளே வியந்து கேட்டுக் கொண்டான்.

★ குறிப்பு : நீர் முந்திரி என்பது நீருக்குள் படர்ந்து வளரும் ஒருவித முட்கொடி என்று அவன் அறியான். அவன் கரையில் நின்ற மரத்தை முந்திரிமரம் என்று நினைத்துக் கொண்டான்.

28. கடனைத் தவிர்க்க

கடன் வாங்கிய ஒருவன், ஏற்கனவே தனக்குக் கடன் கொடுத்தவனுக்குக் கடனைத் திருப்பிக் கொடுக்காமல், மேலும் கடன் வாங்கி அவனை ஏமாற்ற நினைத்தான். கடன் கொடுத்தவனிடம் அவன் “ஐயா, தற்போது நான் பணக்கார