பக்கம்:சிரிக்க சிந்திக்க சிறுவர் கதைகள்.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

68

சிரிக்க சிந்திக்கச் சிறுவர் கதைகள்


கேட்க வந்தவனிடம் “முதலில் நறுமணப் பொருளுக்குரிய காணிக்கையை வை. இல்லையெனில் சொல்லும் குறி, குறி தப்பிவிடும்" என்றார். “அப்படிப்பட்ட நன்கொடை இல்லாமல் சொல்லும் குறி அனைத்தும் நடக்காது” என்றார் மேலும்.

66. அழுகிய தட்டு

அரசு அதிகாரி ஒருவர் உயர் பதவியில் அமர்த்தப்பட்ட போது கடவுள் முன்னிலையில் பதவி உறுதிமோழி எடுத்துக் கொண்டார். “எனது இடது கையால் நான் கையூட்டு (இலஞ்சம்) பெற்றால் என் கண்களுக்கு முன்னாலேயே

அந்தக் கை அழுகட்டும். அவ்வாறே வலது கையால் பெற்றால் அதுவும், அழுகி அழிந்து போகட்டும்” என்று உறுதி செய்தார்.

சில நாள்களுக்குள்ளாகவே ஏராளமான தங்கக்கட்டிகளைக் கையூட்டாக ஒருவர் அவருக்கு வழங்கினார்.