உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சிரிக்க வைக்கிறார் கி. வ. ஐ..pdf/105

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிரிக்க வைக்கிறார் கிவாஜ §8

என்று பெயர். பழங்காலத்தில் ஒரு புலவர் அப்பெருமானைப் பற்றி ஒரு குறவஞ்சி பாடியிருக்கிறார். அதற்கு அமர விடங்கர் குறவஞ்சி என்று பெயர்.

இவர் காளியைத் தரிசித்தார்; அமர விடங்கரையும் தரிசித்து வணங்கினார். பனைமரம் நட்ட நடுவில் முளைத்திருந்த ஆலமரத்தையும் பார்த்தார். அமர விடங்கருக்கும் அந்த ஆலமரத்துக்கும் ஒரு சிலேட்ை பாடினார். - -

கோலும் அமர விடங்கர்தம் கோயில்

அகத்தும்முகில் போலும் திருமேனி கொள்காளி

கோயிற் புறத்தினிலும் ஆல மடக்கிய அப்பனை யாங்கள்கண்

டங்கருமை சால உணர்ந்தனம், பாரியூர் என்னும்

தலத்தினிலே.

முகில் போலும் திருமேனி - மேகத்தைப் போன்ற கரிய திருமேனியை அமர விடங்கருக்கு: ஆலம் மடக்கிய அப்பனை யாங்கள் கண்டம் கருமை சால உணர்ந்தனம் - ஆலகால விடத்தைப் பிறரை அழிக்காமல் மடக்கி உண்ட தந்தையாகிய பரமசிவனை அடியேங்கள் அவனுடைய கண்டமானது கரிய நிறம் நிரம்பியிருப்பதனால் இனம் கண்டு கொண்டோம். ஆலமரத்துக்கு: ஆலம் அடக்கிய அப் பனை யாங்கள் கண்டு அங்கு அருமை சால உணர்ந்தனம் - ஆலமரம் தனக்குள் அடக்கிய அந்தப் பனை மரத்தை நாங்கள் கண்டு அங்கே அந்த அருமையை நன்றாக உணர்ந்தோம்.

வீரன் சின்னான்

வேறு ஒரு முறை இவர் கோபிசெட்டிபாளையம் சென்றபோது தேவராஜ மகால் என்ற மாளிகையில்